சிவகார்த்திகேயனின் மாவீரன்.. வெளியானது மிரட்டல் டைட்டில் வீடியோ.. என்ன ஒரு மாஸ் என்ட்ரி!
சென்னை : டான் படத்தை தொடந்து நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அடுத்ததாக பிரின்ஸ் படம் ரிலீசாக உள்ளது.
Recommended Video
இதையடுத்து தற்போது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் வெற்றிகளை தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து பிரின்ஸ், அயலான் போன்ற படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இந்நிலையில் மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்திலும் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

விரைவில் சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. படத்தை சாந்தி டாக்கீஸ் தயாரிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு இன்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு வீடியோவாக வெளியாகியுள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கம்
மண்டேலா என்ற சிறப்பான படத்தை கொடுத்து முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் மடோன் அஸ்வின், அவரது இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் இணைந்துள்ளது மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் படத்திலேயே யோகி பாபுவை வைத்து சிறப்பான காமெடி மற்றும் சிறப்பான கதைக்களத்துடன் படத்தை கொடுத்திருந்தார் மடோன் அஸ்வின்.

டைட்டில் அறிவிப்பு வீடியோ
இயல்பாகவே சிவகார்த்திகேயனுக்கு காமெடி சென்ஸ் அதிகம் என்பதால் இந்தக் கூட்டணி சிறப்பாக வொர்க் அவுட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள டைட்டில் அறிவிப்பு வீடியோவில் வன்முறையே தூக்கலாக காணப்படுகிறது. தன்னை அடித்து துவம்சம் பண்ணும் அடியாட்களை சிவகார்த்திகேயன் வித்தியாசமான முறையில் பந்தாடுகிறார்.

எதிர்பார்ப்பை தூண்டிய வீடியோ
மிகவும் சிறப்பாக காணப்படுகிறது இந்த வீடியோ. எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது. கயிற்றில் தொங்கியபடி அடியாட்களை அடித்து துவைக்கிறார் சிவகார்த்திகேயன். விரைவில் சூட்டிங் துவங்கவுள்ள இந்தப் படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின் வில்லனாக இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியாரா அத்வானி ஜோடி
இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நாயகி கியாரா அத்வானி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து கமலின் தயாரிப்பில் சாய் பல்லவி ஜோடியாகவுள்ள படத்தின் சூட்டிங்கிலும் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். அடுத்தடுத்த அவரது படங்கள் வெற்றிப் படங்களாக அமைவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தன்னுடைய படங்களை, படத்தின் இயக்குநர்களை சிறப்பாக தேர்ந்தெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவரது அடுத்தடுத்த படங்களின் வெற்றி இதை எடுத்துக் காட்டுகிறது. டாக்டர் படத்தில் அமைதியான டாக்டராகவும், டான் படத்தில் அதிரடி கல்லூரி மாணவனாகவும் நடித்திருந்த சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் எந்த மாதிரியான கேரக்டரில் நடிப்பார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











