தமிழ் -தெலுங்கில் தயாராகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்... ஜனவரியில் சூட்டிங்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் சிறப்பான வெற்றியை பெற்றது.

அடுத்ததாக அவர் நடிப்பில் டான் படம் உருவாகியுள்ளது. இதில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள புதிய படத்தின் சூட்டிங் ஜனவரியில் துவங்கவுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசானது. மனிதக் கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது.

ரிலீசுக்கு தயாரான டான்

ரிலீசுக்கு தயாரான டான்

இதையடுத்து தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். இந்தப் படத்தையும் சிவகார்த்தியின் எஸ்கே புரொடக்ஷ்ன்ஸ் தயாரித்துள்ளது.

 நாயகி பிரியங்கா மோகன்

நாயகி பிரியங்கா மோகன்

டாக்டர் படத்தில் ஜோடியான பிரியங்கா மோகன் இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். எஸ்ஜே சூர்யா, சூரி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜனவரியில் அடுத்த படம்

ஜனவரியில் அடுத்த படம்

இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த படத்திற்கும் சிவகார்த்திகேயன் தயாராகி வருகிறார். டான் படத்திற்கு பிறகு சில வாரங்கள் குடும்பத்துடன் செலவழிக்க திட்டமிட்டுள்ள சிவகார்த்திகேயன் ஜனவரி மாதம் 3வது வாரத்திலிருந்து புதிய படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.

 தமிழ், தெலுங்கில் உருவாகிறது

தமிழ், தெலுங்கில் உருவாகிறது

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கவுள்ளார். படத்தின் முன்னேற்பாடுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமன் இசையமைப்பு

தமன் இசையமைப்பு

படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். காமெடி கலாட்டாவாக இந்தப் படமும் உருவாகவுள்ளது. இயக்குநரின் முந்தைய படமான ஜத்தி ரத்னலு இவ்வாறாக காமெடி படமாக வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்தப் படமும் அத்தகைய படமாக உருவாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X