சிவகார்த்திக்கேயனின் ‘டாணா’
சிவகார்த்திக்கேயன் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'டாணா' என்று பெயரிட்டுள்ளனர்.
'எதிர்நீச்சல்' படத்தில் இணைந்த ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் - சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறது.
'டாணா' படத்தின் திரைக்கதையை பட்டுக்கோட்டை பிரபாகரன், இயக்குனர் துரை செந்தில்குமார் இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.

ஹாட்ரிக் வெற்றி
வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திக்கேயன் ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

ஹன்சிகா ஜோடியாக
புதுமுக நடிகைகளுடன் மட்டுமே ஜோடி சேர்ந்த சிவகார்த்திக்கேயன் முதன்முறையாக மான்கராத்தே படத்தில் ஹன்சிகா உடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

டாணாக்காரன்
‘‘டாணா' என்பது தமிழ் வார்த்தைதான். இதன் பொருள் காவல் என்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். டாணாக்காரன் என்றால் காவல்காரன் என்றும் அர்த்தம்'' என்கிறார்.

ஜோடி யாரு?
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார், யார் இசை அமைப்பாளர் என்பதும் இன்னும் முடிவாகவில்லை. தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

ரசிகர்களைக் கவருமா?
சிவகார்த்திக்கேயன் நடித்த கேடி பில்லா, கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற வைத்தனர். இந்த படமும் சிவகார்த்திக்கேயனின் ஸ்டைலில் இருக்குமா? அல்லது ட்ரெண்டை மாற்றி நடிப்பாரா? அது ரசிகர்களை கவருமா என்பது படம் வெளியான பின்னர் தெரியவரும்.


Click it and Unblock the Notifications











