அப்படியெல்லாமா பிரிப்பீர்கள்.. ஃபிலிம்பேர் விருது விழாவில் ஆங்கரை அலறவிட்ட சிவகார்த்திகேயன்..எஸ்கேனா சும்மாவா?

கொச்சி: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பராசக்தி திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அவர் சேயோன் மற்றும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவிருக்கிறார். இரண்டு படங்களும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க கேரள மாநிலம் கொச்சியில் நேற்று ஃபிலிம்பேர் விருது விழா நடைபெற்றது. அதில் ஆங்கர் கேட்ட ஒரு கேள்விக்கு எஸ்கே சொன்ன பதில் சோஷியல் மீடியாவில் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தற்போது சினிமாவில் பெரிய ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் ஆங்கராக இருந்த காலத்திலேயே பல திறமைகளை தன்னிடம் கொண்டிருந்ததால் அதில் பெரிய சக்சஸை சந்தித்தார். அதேபோல் சினிமாவுக்கு வந்த பிறகும் தனக்கான திறமைகளை வளர்த்து கடுமையாக உழைத்து இப்போது மார்க்கெட்டை உயர்த்தியிருக்கிறார். கடந்த மாதம் வெளியான பராசக்தி படத்தில்கூட அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்துக்கு சுமார் வரவேற்பு: சிவாவின் நடிப்புக்கு படத்தில் அப்ளாஸ் கிடைத்தாலும்; படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. அது எஸ்கேவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் கொஞ்சம் அப்செட்டைத்தான் கொடுத்திருக்கும். அதேசமயம் படமானது நூறு கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. எனவே அவரது கரியரில் நூறு கோடி ரூபாய் வசூலித்த நான்காவது படமாக பராசக்தில் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது. பத்து படங்களில் காணாமல் போய்விடுவார் என சிலரால் கருதப்பட்ட எஸ்கே; இப்போது நான்கு நூறு கோடி ரூபாய் படங்களை கொடுத்திருப்பது நிச்சயம் பாராடப்பட வேண்டிய ஒன்று.

Sivakarthikeyan s Powerful Reply on South vs North Cinema Goes Viral at Filmfare Awards
Photo Credit:

அடுத்த படங்கள்: பராசக்தி படத்துக்கு பிறகு அவர் தாய் கிழவி இயக்குநர் சேயோன் படத்தில் நடித்துவருகிறார். கமல்ஹாசன் இரண்டாவது முறையாக சிவாவை வைத்து தயாரிக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் பிரமாண்ட பட்ஜெட்டில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாகும் என தெரிகிறது. இதற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் வெங்கட் பிரபு மும்முரமாக ஈடுபட்டுவருகிறார். கண்டிப்பாக இந்த இரண்டு படங்களும் தரமான வெற்றியை அவருக்கு கொடுக்கும் என நம்பலாம்.

ஃபிலிம்பேர் விருது: சூழல் இப்படி இருக்க கேரள மாநிலம் கொச்சியில் ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமரன் திரைப்படம் ஏகப்பட்ட பிரிவுகளில் நாமினேட்டாகி விருதுகளை பெற்றது. சிவாவுக்கும் அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதை சிம்ரனிடமிருந்து பெற்றுக்கொண்டார். அவர் விழா நடக்கும் அரங்கத்துக்கு செல்வதற்கு முன்பு அவரிடம் தொகுப்பாளினி, தென்னிந்திய திரைத்துறை பற்றி மூன்று விஷயங்களை சொல்லுமாறு கேட்டார்.

சிவாவின் பதில்: அதற்கு, "தென்னிந்திய திரைத்துறை, வட இந்திய திரைத்துறை என்று பிரித்து பார்ப்பீர்களா?" என கேட்டுவிட்டு பதிலளித்த அவர், "பல திறமைகள் இருக்கின்றன. சமூகத்தை பிரதிபலிக்கும் கதைகள் இருக்கின்றன. திறமையான ஆர்ட்டிஸ்ட்டுகள் மட்டுமில்லை; சிறந்த எழுத்தாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அதுதான் பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன். அமரன் படம் கிட்டத்தட்ட அனைத்து பிரிவுகளிலும் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது. அது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி அளிக்கிறது. கண்டிப்பாக நிறைய விருதுகளை அள்ளும் என நம்பிக்கை இருக்கிறது" என்றார். இந்திய திரைத்துறையை தென்னிந்திய, வட இந்திய என பிரிக்கும் வகையில் கேள்வி கேட்ட தொகுப்பாளினிக்கு சிவா கொடுத்த பதிலை அனைவரும் பாராட்டிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X