»   »  இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ரெமோ!

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனின் ரெமோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி முருகன் என்ற ஜாலியான படத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த படம் எப்போ என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, சிவகார்த்திகேயனோ சற்றே இடைவெளி விட்டுள்ளார்.

இப்போது அவர் நடித்துவரும் ரெமோ, இதுவரை அவர் நடித்ததிலேயே பெரிய பட்ஜெட் படம். பிசி ஸ்ரீராம் போன்ற பெரிய டெக்னீஷியன்களை வைத்து வேறு ரேஞ்சில் தயாரித்துக் கொண்டிருக்கிறார் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மூலம்.


சீன் ஃபுட்

சீன் ஃபுட்

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் தோற்றத்தை வடிவமைத்தவர் சீன் ஃபுட். ஐ படத்தில் விக்ரமின் தோற்றத்தை வடிவமைத்தவர்.


ஒற்றைப் பாடல்

ஒற்றைப் பாடல்

ரொம்ப இடைவெளி இருந்தால் ரசிகர்கள் மறந்து போய்விடுவார்கள் என்பதால், படத்தின் ஒற்றைப் பாடலை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளாராம் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா.


கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி கீர்த்தி சுரேஷ். ரஜினிமுருகன் என்ற ஒரே படத்தின் மூலம் ஓஹோ என உச்சத்துக்குப் போய்விட்டவர்.


கேஎஸ் ரவிக்குமார்

கேஎஸ் ரவிக்குமார்

படத்தில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஹீரோவுக்குப் பிறகு முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம் இது.


இறுதிக் கட்டம்

இறுதிக் கட்டம்

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு ஜூன் இறுதியில் நடக்கும் என்று தெரிகிறது. ஜூனுக்குள் முழுப் படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாக உள்ளன.


English summary
If all goes well, shoot of Sivakarthikeyan’s Remo will be completed by mid-June.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil