சேயோன் நிலைமை என்ன தெரியுமா?.. சிவகார்த்திகேயன் பரபரனு இருக்குறாரே ப்பா!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பராசக்தி திரைப்படம் சுமாரான வரவேற்பைதான் பெற்றது. ஆனால் அதற்கு ஏற்றப்பட்ட ஹைப்போ சொல்லில் அடக்க முடியாதது. கொடுக்கப்பட்ட ஹைப் அளவுக்கு படம் இல்லை என்பதால் ரொம்பவே ரசிகர்கள் அப்செட் ஆனார்கள். அந்த அப்சேட்டை அடுத்து வரும் சேயோன் திரைப்படத்தில் எப்படியாவது போக்கிவிட வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறார் எஸ்கே.

சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் தோல்வியடைந்தபோது இனிமேல் எஸ்கே அவ்வளவுதான்; அவருக்கான டைம் சினிமாவில் முடிந்துவிட்டது என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அவரோ அடுத்தடுத்து மாவீரன், அயலான், அமரன் என ஹிட் கொடுத்தார். அதுவும் அமரன் படத்தின் மெகா வெற்றி அவரை கோலிவுட்டின் டயர் 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் அழுத்தமாக பதித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan s Seyon Opening Song Shoot Successfully Wrapped Up
Photo Credit:

பராசக்தி சுமார்தான்: அந்தப் படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்தார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால்; தரமான சம்பவம் செய்யும், இதுவரை இல்லாத அளவுக்கு விவாதத்தை கிளப்பும் என்றெல்லாம் கணிப்புகள் ரிலீஸுக்கு முன்னர் வந்தன. ஆனால் பத்தோடு பதினொன்று என்ற ரீதியில்தான் படத்தின் மேக்கிங் இருந்தது. இதனால் படம் சுமார் ஹிட்டே அடித்தது.

Also Read
Parimala & Co Day 1 Box Office - பரிமளா & கோ முதல் நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?
Parimala & Co Day 1 Box Office - பரிமளா & கோ முதல் நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலைமை என்ன?

தாய் கிழவி இயக்குநருடன்: இத்ற்கிடையே வெங்கட் பிரபுவுடன் இணையவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கும் முன்னதாக தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்கிறார். தாய் கிழவி படம் ஹிட்டான பிறகு அவர் இந்த முடிவை எடுக்கவில்லை; மாறாக அந்தக் கதையை தன்னிடம் சொன்னபோதே அதில் ஈர்க்கப்பட்ட எஸ்கே; வேறு லைன் இருக்கிறதா என கேட்க அப்போது சேயோன் படத்தின் லைனை சொல்லி ஓகே வாங்கினார் இயக்குநர் சிவக்குமார்.

பெரிய நம்பிக்கை: படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ஏற்கனவே அமரன் படம் எஸ்கே - கமல் கூட்டணியில்தான் வெளியானது. அது மாதிரியே இதுவும் பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள். அத்தனைக்கும் மேலே இயக்குநர் சிவக்குமார் முருகேசன்தான் இந்தப் படத்தின் தூண் ஆவார். ராதிகாவை வைத்து ஒரு படத்தை மெகா ப்ளாக் பஸ்டராக கொடுத்தவர்; சிவகார்த்திகேயன் கிடைத்தால் சும்மாவா விடுவார். நிச்சயம் இப்படம் எஸ்கேவின் கரியரில் பெரிய பெயரை பெறும் என்று நம்பலாம்.

படத்தின் நிலைமை: இந்தப் படத்தை முடித்துவிட்டு இன்னொரு படத்தையும் சிவக்குமார் இயக்கத்தில்தான் நடிக்கவிருக்கிறார் எஸ்கே. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் பூஜை போட்டு தொடங்கியது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். சூழல் இப்படி இருக்க படத்தில் சிவகார்த்திகேயனுக்கான ஓபனிங் பாடல் சமீபத்தில் நடந்துவந்தது. அது தற்போது முடிவடைந்திருக்கிறதாம். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X