நடிகர் சிவகார்த்திகேயனின் சூப்பர்ஹிட் படத்தோட 2ம் பாகம்... பேச்சுவார்த்தை மும்முரம்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளிவந்து ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவரின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரெமோ படங்களின் 2ம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது அடுத்த படத்தின் 2ம் பாகத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீசான சில தினங்களிலேயே அவரது முந்தைய படங்களின் வசூலை பீட் செய்துள்ளது. விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது டாக்டர் படம்.

டான் படம்

டான் படம்

இந்நிலையில் அடுத்ததாக அவரது டான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சிவா கல்லூரி மாணவராக நடித்துள்ளதால், அதற்கென தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஹீரோ இமேஜ் கொடுத்த படங்கள்

ஹீரோ இமேஜ் கொடுத்த படங்கள்

சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ மற்றும் ரஜினி முருகன் ஆகியவை அவருடைய சினிமா கேரியரில் சிறப்பான படங்களாக அமைந்தன. காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வெளிவந்த இந்தப் படங்கள் அவருக்கு ஹீரோ இமேஜை கொடுத்த முக்கிய படங்கள்.

இரண்டாவது பாகம்

இரண்டாவது பாகம்

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரெமோ படங்களில் ஒன்றை இரண்டாவது பாகமாக எடுக்க தற்போது பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி முருகன் 2வது பாகம்

ரஜினி முருகன் 2வது பாகம்

இந்நிலையில் தற்போது அவரது சூப்பர்ஹிட் திரைப்படமான ரஜினி முருகன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. கடந்த 2016ல் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் டைரக்ட் செய்திருந்தார்.

அதே இயக்குநர், தயாரிப்பாளர்

அதே இயக்குநர், தயாரிப்பாளர்

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. 22 கோடியில் உருவான இந்தப் படம் 51 கோடி வசூலை பெற்றுத் தந்தது. இந்நிலையில் பொன்ராம் இயக்கத்திலேயே படத்தின் இரண்டாவது பாகத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எகிறிய மார்க்கெட்

எகிறிய மார்க்கெட்

டாக்டர் படத்தின் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட் கோலிவுட்டில் அதிகரித்துள்ளது. இதையடுத்து முன்னதாக அவரது வெற்றிப் படங்களின் இரண்டாவது பாகத்தை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது சிறப்பானது. இந்தப் படங்களும் முதல் பாகத்தின் வெற்றியை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X