சிவகார்த்திகேயனின் தெலுங்கு படம் எப்போது துவங்குகிறது தெரியுமா??
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடைசியாக வெளியான டாக்டர் பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்துள்ளது
அடுத்ததாக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார்
ஜாதி ரத்னாலு பட இயக்குனர் அனுதீப் கேவி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

பிளாக்பஸ்டர் வெற்றி
அனைத்து தரப்பு மக்களையும் கவரும் நல்ல படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இறுதியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளது.
கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நெல்சன் இரண்டாவதாக இயக்கிய படம் டாக்டர். நெல்சன் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான டாக்டர் சற்று தாமதமாகவே வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது

படம் முழுவதும் மௌனமாக
தன்னுடைய படங்களில் மற்றவர்களை கவுண்ட்டர்கள் மூலம் வெச்சி செய்யும் சிவகார்த்திகேயனை நெல்சன் டாக்டர் படத்தில் மிகக் குறைந்த அளவிலேயே வசனங்கள் கொடுத்தும் பெரிதாக பேச விடாமல் படம் முழுவதும் மௌனமாக இருக்க செய்துள்ளார். சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் காண்போர் அனைவருக்கும் மிக வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்க யோகி பாபு, ரேடின் கிங்ஸ்லி, வி ஜே அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக
அடுத்ததாக அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இப்போது டான் திரைப்படத்தில் நடித்துவருகிறார் முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது டான் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது டாக்டர் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா இப்படத்திலும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்

பூஜையுடன் துவங்க உள்ளது
சிவகார்த்திகேயனின் படங்களுக்கு தெலுங்கிலும் மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதால் இப்போது நேரடியாக தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். ஜாதி ரத்னாலு பட இயக்குனர் அனுதீப் கே வி இயக்கத்தில் உருவாகும் படம் சிவகார்த்திகேயனின் 20 வது படமாக உருவாகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இப்படத்தை தயாரிக்க தமன் இசை அமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் பூஜையுடன் துவங்க உள்ளது என தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











