சரியான அவமானம்.. மேடையில்கூட பேசவிடவில்லை.. சிவகார்த்திகேயன் எமோஷனல்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி படம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. அநேகமாக விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் போட்டிக்கு எஸ்கேதான் முழு காரணம் என சிலர் பேசும் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் கொடுத்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சின்னத்திரையில் தோன்றிய சிவகார்த்திகேயன் பிறகு சினிமாவுக்குள் வந்தார். ஏகன் படத்தில் சின்ன ரோலில் தலை காட்டியவரை தனுஷ்தான் 3 படத்தில் நிறைய சீன்களில் வரும்படி பார்த்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பாண்டிராஜ் மெரினா படத்தில் ஹீரோவாக மாற்றினார். இப்படி பல விஷயங்களை பார்த்தும், பலரின் வழிகாட்டுதலாலும் இந்தத் துறைக்கு வந்து தனது திறமையை வளர்த்து படிப்படியாக உயர ஆரம்பித்தார்.
இப்போது டாப்: அவர் சினிமாவுக்குள் வந்தபோது சில காலம் மட்டுமே தாக்குப்பிடிப்பார்; வெற்றிகள் எல்லாம் லக்கில் வந்துகொண்டிருப்பவரை என்றெல்லாம் பலரும் பேசினார்கள். ஆனால் எஸ்கேவின் நின்று விளையாட; வரிசையாக வெற்றிகள் வந்துகொண்டே இருந்தன. முக்கியமாக கடந்த வருடம் வெளியான அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆக; அவரது மார்க்கெட்டை டாப்புக்கு கொண்டு சென்றுவிட்டது என்றே சொல்லலாம்.

சம்பளம் உயர்வு: உலகம் முழுவதும் மொத்தம் 300 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. இதன் காரணமாக எஸ்கேவும் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்திவிட்டார் என்றும் தகவல் வருகிறது. இப்போது நடித்திருக்கும் பராசக்தி படத்துக்குக்கூட 40 கோடி ரூபாய்வரை ஊதியமாக வாங்கினார் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
பராசக்தி ரிலீஸ்: இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் பராசக்தி படமும் அவரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் என சிகா ரசிகர்கள் நம்புகிறார்கள். இது அவரது 25ஆவது படமாக அமைந்திருப்பதும் கூடுதல் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஜனவரி 14ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் கடந்த சில நாட்களாக தேதியை குறிப்பிடாமல் பொங்கலுக்கு ரிலீஸ் என்று சொல்கிறார்கள். அநேகமாக விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சிவகார்த்திகேயன் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "எனக்கு சில படங்கள் தோல்வியடைந்தன. அப்போது பலரும் என்னை அவமானப்படுத்தினார்கள். மேடையில்கூட பேசவிடவில்லை. அப்படி அவர்கள் அவமானப்படுத்தியதுதான் என்னை மேலும் மேலும் உழைக்க வைத்து வெற்றி பெற வைத்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











