திரைப்படங்கள் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும்…. சிவகார்த்திகேயன் விருப்பம் !

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் எப்போதும் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்பது எனது ஆசை என்று கூறினார்.

Recommended Video

Sivakarthikeyan Speech | Naai Sekar Title Issue | Vadivelu | Sathish | Filmibeat Tamil

கோவையில் பிரபல கார்டூனிஸ்ட் மதியின் இணைய தொடக்கவிழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகயேன் இவ்வாறு பேசினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் தீலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 9ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்

தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் பத்திரமாக பார்க்கும் நிலை வரக்கூடாது குடிக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது வணிகம் தான்.

தண்ணீரை பாதுகாக்க வேண்டும்

தண்ணீரை பாதுகாக்க வேண்டும்

ஆனால், வணிகமானதால் தண்ணீர் பற்றாக்குறையானதா, தண்ணீர் பற்றாக்குறையால் வணிகமானதா எனத் தெரியவில்லை. அந்த அரசியலுக்குள் நான் போக விரும்பவில்லை. நம் அடுத்தத் தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றால், அதை இந்தத் தலைமுறையில் சரிசெய்ய வேண்டும் என்றார்.

டாக்டர் 9ந் தேதி ரிலீஸ்

டாக்டர் 9ந் தேதி ரிலீஸ்

நான் நடித்த டாக்டர் திரைப்படம் அடுத்த மாதம் 9-ந் தேதி வெளியாகிறது. திரைப்படங்கள் எப்போதும் தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்பது தான் எனது ஆசை. திரையங்குகளில் நான் படம் பார்த்து வளர்ந்தவன் என்பதே அதற்கு காரணம். எனது படம் ஓடிடியில் வெளியாகாமல் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

படத்தையே நம்பி உள்ளனர்

படத்தையே நம்பி உள்ளனர்

அதே சமயம், ஓடிடியில் படம் வெளியாவதால் அனைத்து மொழிகளிலும் வெளியிட எளிதாக உள்ளது. படத்தை வெளியிடுவது குறித்து நடிகர்கள் சேர்ந்து முடிவு எடுக்க முடியாது. படம் வெளியே வருவது கஷ்டமாக இருந்தது. தற்போது வெளியே வரும் படங்களை வியாபாரம் செய்வது கஷ்டமாக உள்ளது. படம் ரிலீஸானால்தான் அதை நம்பியுள்ளவர்களின் வேலை நடக்கும்.

தமிழில் தலைப்பு

தமிழில் தலைப்பு

பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தியேட்டர்களுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது நல்ல வி‌ஷயம். ஆனால் தமிழ் தலைப்புகள் சில நேரங்களில் கிடைப்பதில்லை என்று பல செய்திகளை அழகாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X