அஜித் படத்தை தயாரிக்குற அளவுக்கு இன்னும் என் கம்பெனி பெருசாகல.. பதறிய சிவகார்த்திகேயன்!
சென்னை: இந்த வாரம் வெளியாகியுள்ள புதிய படங்களில் சிவகார்த்திகேயன் தயாரித்து ராதிகா சரத்குமார் நடித்துள்ள 'தாய் கிழவி' வசூல் தாண்டவம் ஆடப்போவது உறுதியாகி உள்ளது. விஜய்யின் ரீ ரிலீஸ் படமான தெறி படத்தை விட தாய் கிழவி அதிக வசூல் ஈட்டும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் டிக்கெட் புக்கிங்கை வைத்து கணித்து விட்டனர்.
தொடர்ந்து பல படங்களை தயாரித்து வரும் சிவகார்த்திகேயன் அஜித் குமாரை வைத்து படம் தயாரிப்பாரா? என இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டபோது, அதற்கு எல்லாம் வாய்ப்பே கிடையாது என ஓபனாக பேசிவிட்டார்.

நடிகர் அஜித் குமாரின் அடுத்த தயாரிப்பாளர் யார் என்பது இன்னமும் முடிவாகாத சூழலில் பத்திரிகையாளரின் கேள்வியும் சிவகார்த்திகேயனின் பதிலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்: சூர்யா, ஜோதிகா, ஷாலினி, சுதா கொங்கரா, மணிகண்டன் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்களும் சிவகார்த்திகேயன் வழங்கிய செலிபிரிட்டி ஷோவை கண்டு ரசித்து படத்தை பாராட்டியுள்ளனர். மேலும், படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் போன்ற விமர்சகர்களும் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ள நிலையில், மக்களும் கண்டிப்பாக இந்த வாரம் தியேட்டருக்கு வந்து படத்தை கொண்டாடுவார்கள் என்கிற நம்பிக்கையில் சிவகார்த்திகேயன் செம சந்தோஷத்தில் உள்ளார். முதல் நாள் டிக்கெட் புக்கிங்கும் சிறப்பாகவே பல இடங்களில் உள்ளதாக கூறுகின்றனர்.
அஜித் படத்தை தயாரிப்பீர்களா: இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட சிவகார்த்திகேயன் படத்துக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு உற்சாகத்தை கொடுப்பதாக கூறியுள்ளார். சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றி அவருக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் படத்தை தயாரிப்பீர்களா என்கிற கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் எழுப்ப அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றார்.
ரொம்ப சின்ன கம்பெனி: சுமார் 180 கோடி ரூபாய் சம்பளமாக கேட்கும் அஜித் குமாரை எல்லாம் வைத்து சிவகார்த்திகேயனால் எப்படி படம் பண்ண முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அந்த கேள்வி வந்ததுமே பதறிப்போன சிவகார்த்திகேயன் என்னோட கம்பெனி சின்ன கம்பெனி அந்தளவுக்கு வளர பல காலங்கள் எடுக்கும். அப்படி ஒருவேளை வளர்ந்தால் அஜித் சார் என் கம்பெனில படம் பண்ண சம்மதிச்சா அதற்கும் வாய்ப்பு இருக்கு. ஆனால், இதெல்லாம் நடக்கிற காரியமா என ஜாலியாக பேசிவிட்டுச் சென்றார்.
அஜித் படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கலையா?: அஜித் குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால், இன்னமும் படத்திற்கு தயாரிப்பாளர் லாக் செய்யப்படவில்லை என்கின்றனர். அஜித்தின் கடைசி படமான குட் பேட் அக்லி திரைப்படமே 200 கோடி ரூபாய் தான் பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஈட்டிய நிலையில், 180 கோடி சம்பளம் எல்லாம் அதிகம் என தயாரிப்பாளர்கள் ஒதுங்குவதாக கூறுகின்றனர். அதன் காரணமாகவே படத்தில் மோகன்லால் இணையவுள்ளார் என்றும் கூடிய சீக்கிரமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











