அம்மா, அப்பா, கடவுளை மட்டுமே வணங்க வேண்டும்.. என்னை ரசிகர்கள் வணங்க வேண்டாம் - சிவகார்த்திகேயன்!

சென்னை: ரசிகர்கள் தன்னை கடவுளாக நினைத்து எப்போதுமே வணங்கக் கூடாது என்பதில் தான் ரொம்பவே உறுதியாக இருப்பதாகவும், அம்மா, அப்பா மற்றும் கடவுளை மட்டுமே அனைவரும் வணங்க வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நடிகர் சிவகார்த்திகேயன், சென்னையில் நடைபெற்ற Fanly பொழுதுபோக்கு செயலியின் அறிமுக விழாவில் பங்கேற்று, ரசிகர்களுடனான தனது பிணைப்பு மற்றும் சமூக ஊடகங்களின் பங்கு குறித்துப் பேசினார். தனது ரசிகர்களை அண்ணன் தம்பிகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் கருதுவதாக அவர் இச்சமயத்தில் வலியுறுத்தினார்.

Sivakarthikeyan says I wish my fans only worship their parents and God not me

ரசிகர்களின் வளர்ச்சிக்கு தான் எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும், அவர்களை வேறு எந்தத் திசைக்கும் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். ரசிகர்களின் மனதில் தவறான எண்ணங்கள் புகுந்துவிடக் கூடாது என்பதில் தனக்கு மிகுந்த அக்கறை உண்டு என சிவகார்த்திகேயன் குறிப்பிட்டிருந்தார்.

என்னை கும்பிட வேண்டாம்: "என்னை தெய்வமாகவோ, தலைவராகவோ வழிபடும் ரசிகர்கள் எனக்குத் தேவையில்லை. அவர்கள் கடவுளையும் தங்கள் பெற்றோர்களையும் மட்டுமே வழிபட வேண்டும் என்பதே என் விருப்பம். என்னிடம் தோழமையுடன் பழகும், அண்ணன் தம்பி போல நெருங்கிப் பழகும் ரசிகர்கள் தான் எனக்கு வேண்டும்" என்று சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசினார்.

Sivakarthikeyan says I wish my fans only worship their parents and God not me

மூளை குறைவு: மேடையில் இருந்தவர்களை ஒப்பிட்டுக் கூறிய அவர், "இங்குள்ள மற்றவர்களைக் காட்டிலும் எனக்குச் சற்று மூளை குறைவு என்றே நினைக்கிறேன். அதனால்தான் என்னால் நன்றாக நடிக்க முடிகிறது. மூளை அதிகமாக இருந்தால், இயக்குநர்களை நிச்சயம் தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிடுவேன். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடிக்கும் ஒருவனாக இருப்பதற்கு, சற்றுக் குறைவான அறிவுத்திறனே நன்மை பயக்கும்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

சோஷியல் மீடியா நெகட்டிவிட்டி: சமூக வலைத்தளங்களில் நிலவும் சூழல் குறித்தும் சிவகார்த்திகேயன் விவாதித்தார். "இன்றைய சமூக ஊடகங்களில், பல செயலிகள் நெகட்டிவ் செய்திகளையே அதிகம் பரப்புகின்றன. போலியான தகவல்களும், புனையப்பட்ட ட்வீட்களும் ஈர்ப்பிற்காகவே வெளியிடப்படுகின்றன" என்று அவர் கவலை தெரிவித்த அதன் காரணமாகவே தான் அதை அதிகம் பயன்படுத்துவதில்லை என்றும் என்னுடைய டீம் தான் அதை கவனித்துக் கொள்கின்றனர் என்றும் கூறினார். மேலும், இன்ஸ்டாகிராம் மட்டுமே எப்போதாவது பயன்படுத்துவேன், அப்போது கூட தெரியாமல் எதையாவது ஸ்வைப் செய்துவிட்டால், டீமில் இருந்து போன் வரும், ஏன் இதை ரீபோஸ்ட் செஞ்சீங்கன்னு, நான் சும்மா ஸ்வைப் தானே பண்ணேன் என்பேன். அந்த அளவுக்குத்தான் எனக்கு சோஷியல் மீடியா பயன்பாடு பற்றி தெரியும் என்றும் ஓபனாக பேசினார்.

பராசக்தி: இன்பன் உதயநிதி வழங்க டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் விரைவில் சிவகார்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடித்த பராசக்தி திரைப்படம் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் ரேஸில் விஜய்யின் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி என ரெண்டே பேருக்கும் மட்டும் தான் தமிழ்நாட்டில் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X