சிவகார்த்திகேயனுக்கு நடிப்பைவிட இதுதான் ரொம்ப பிடிக்குமாம்... எதுன்னு தெரிஞ்சுக்கலாமா!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு ரிலீசாகியுள்ளது டான் படம். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகியுள்ளார் பிரியங்கா மோகன். இந்த ஜோடி டாக்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரிலீசாகியுள்ள படம் டான். டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப் படமும் அனைத்து சென்டர்களிலும் வெற்றியை சுவைத்து வருகிறது.

அப்பா -மகன் சென்டிமெண்ட்
இந்தப் படத்தில் அப்பா -மகன் சென்டிமெண்ட், ஆசிரியர் -மாணவர் உறவு, காதல், காமெடி என அனைத்து விஷயங்களையும் இணைத்து கொடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள இவர், அவரையே தன்னுடைய உத்வேகமாக எடுத்துக் கொண்டு, ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து சிறப்பான படத்தை கொடுத்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த நடிப்பு
படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பு வழக்கம்போல ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கல்லூரி மாணவராக இவரை எப்படி பார்ப்பது என்ற சந்தேகத்தை பொய்யாக்கி, கல்லூரி மாணவராக மட்டுமின்றி பள்ளி மாணவராகவும் நடித்து அதை நியாயம் செய்திருக்கிறார். பார்ப்பதற்கு இவரது கெட்டப் சிறப்பாகவே இருந்தது.

வில்லனாகும் அப்பாக்கள்
தன்னுடைய மகனை ஹீரோவாக்கும் முயற்சியில் அனைத்து அப்பாக்களும் கடைசி வரையில் வில்லன்களாகவே இருந்து விட்டு சென்று விடுகின்றனர் என்ற கருவை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்பா கேரக்டரில் சமுத்திரக்கனி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவரது நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

பிடித்தமான விஷயம்
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சோனி மியூசிக்கின் ஜஸ்ட் எ மினிட்டிற்காக பேசிய சிவகார்த்திகேயன் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். நடிப்பு, பாட்டு, பாடலாசிரியர், தயாரிப்பு, தொகுப்பாளர் இவற்றில் எதைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

ஆங்கரிங் கொஞ்சம் எக்ஸ்ட்ரா
ஆனால் இவை அனைத்திலும் தனக்கு ஆங்கரிங் தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய நாள் மொபைல் போனில் துவங்கி மொபைல் போனிலேயே முடிவதாகவும் தனக்கு வேலை செய்வதில்தான் மிகுந்த ஆர்வம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கதைத்தேர்வு குறித்த சீக்ரெட்
தான் ஒரு நபரை பார்த்தவுடன் அவரது சிரிப்பை தான் முதலில் நோட்டீஸ் செய்வேன் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பள்ளிக் காலங்களில் தான் இருக்கும் இடமே தெரியாத அளவில்தான் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு எந்த அளவில் ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் பிடிக்கிறது என்பதை பொருத்தே தான் கதைகளை தேர்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











