தயாரிப்பாளர் பேசுனதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அயலான் விழாவில் சிவகார்த்திகேயன் அதிரடி

சென்னை: இடம் சின்னதா இருந்தாலும் நம்ம சத்தம் எப்பவும் பெருசா இருக்கும் என அயலான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதே போல தயாரிப்பாளர் பாகுபலி ரேஞ்சுக்கு கொடுத்த பில்டப்புக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என சிவகார்த்திகேயன் அதிரடியாக பேசியுள்ளார்.

பல தடைகளை கடந்து வரும் பொங்கலுக்கு எந்த படம் வந்தாலும் அயலான் படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்கிற உறுதியை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ளார். முன்னதாக அயலான் படம் பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு வாய்ப்பே கிடையாது என்பதை உறுதி செய்துள்ளார்.

Sivakarthikeyan says there is no connection with me and producer KJR speech about Ayalaan

டிரெய்லர் எப்போ?: அயலான் படத்தின் டீசரை விட டிரெய்லர் தரமாக இருக்கும் என்றும் வரும் ஜனவரி 5ம் தேதி டிரெய்லர் வெளியாகிறது என்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம அப்டேட் கொடுத்துள்ளார். இந்த படத்திற்காக சம்பளமே வாங்காமல் முன்னதாக யூடியூப் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசி சிவகார்த்திகேயன் ஆச்சர்யத்தை அளித்திருந்தார். படத்தின் கதை மீதும் இயக்குநர் ரவிகுமார் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளார்.

ரத்தத்தையும் துப்பாக்கி சத்தத்தையும் நம்பல: அயலான் படத்தில் பவுடர் ரத்தத்தை நம்பாமல் ஏலியனை நம்பி எடுத்திருக்கிறோம். நிச்சயமாக தமிழில் வெளியாக உள்ள ஒரு நல்ல படமாகவே அயலான் இருக்கும் என்றும் தனது பேச்சின் போது சிவகார்த்தியேன் தெரிவித்துள்ளார்.

நம்ம சத்தம் பெருசா இருக்கும்: அயலான் படத்தின் இசை வெளியிட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் எல்லாம் பிரம்மாண்டமாக நடைபெறவில்லை. சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களுடனே நடத்தப்பட்டது. மாரி செல்வராஜ் உள்ளிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஏ.ஆர். ரஹ்மான், ரவிக்குமார் பங்கேற்றனர். இடம் சின்னதா இருந்தாலும் நம்ம சத்தம் பெருசா இருக்கும் என சிவகார்த்திகேயன் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தயாரிப்பாளர் பேசுனதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை: கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனர் கோட்டபாடி ஜெயம் ராஜேஷ் பேசும் போது தெலுங்குக்கு ஒரு பாகுபலி, கன்னட சினிமாவுக்கு ஒரு கேஜிஎஃப் போல தமிழுக்கு அயலான் இருக்கும் என பேசியிருந்தார். கடைசியாக மேடை ஏறி பேசிய சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் பிரதர் கேஜேஆர் பேசுனதுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஆனால், கன்டென்ட் அவருடையது. அதன் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் அப்படி பேசியுள்ளார் என ரொம்பவே தன்னடகத்துடன் சிவகார்த்திகேயன் பேசினார்.

போட்டி இல்லை: அவரை முந்தணும், இவரை முந்தணும் என்கிற எந்தவொரு போட்டியும் எனக்கு இல்லை. தமிழ் சினிமாவுக்கு என்னால முடிந்த நல்ல படங்களை கொடுக்கணும் ரசிகர்களை என்டர்டெயின் செய்யணும் அதுதான் வேண்டும் என தனுஷ் உடனான கேப்டன் மில்லர் vs அயலான் போட்டிக்கு மறைமுகமாக பதில் சொல்லி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தலைவர் 171ல் இல்லை: மேலும், முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன் தலைவர் 171வது படத்தில் நடிக்க இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை என்பதையும் போட்டு உடைத்து விட்டார். மேலும், முழுக்க முழுக்க லவ் சப்ஜெக்ட் படத்தில் நடிக்கவும் தனக்கு ஆசை என யங் லுக்கில் சிவகார்த்திகேயன் பேசியதை பார்த்த இயக்குநர்கள் இந்நேரம் காதல் சப்ஜெக்ட் உடன் சிவகார்த்திகேயன் ஆபிஸுக்கு சென்றிருப்பார்கள் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X