சென்சார் போர்டுக்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்.. அவங்களும் மனிதர்கள் தான் - சிவகார்த்திகேயன்!
சென்னை: விஜய் நடித்த ஜன நாயகன் படத்தை தணிக்கை குழு திட்டமிட்டு முடக்கி வருவதாக இயக்குநர்கள் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், அஜய் ஞானமுத்து, ராம் கோபால் வர்மா உள்ளிட்ட பலர் கடுமையான கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை போன்று தணிக்கை துறையையும் தங்கள் கைப்பாவைகளாக ஆக்கி விட்டது என கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பராசக்தி படத்தை ரசிகர்களுடன் பார்க்க தியேட்டருக்கு வந்த சிவகார்த்திகேயனிடம் தணிக்கை துறை பற்றிய கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில், "சென்சார் போர்டு இப்படி செய்வது இயல்பு தான்" என அவர் பேசியுள்ளார்.
காத்திருந்தது வீண் போகல: கடைசி வரை சென்சார் சர்டிபிகேட் பராசக்தி படத்துக்கு 100 சதவீதம் வந்துவிடும் என பராசக்தி படக்குழுவினர் தைரியமாக படத்தின் ரிலீஸ் தேதியை முன் கூட்டியே கொண்டு வந்தும் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் படத்தில் கிடைத்து விட்டது. இயக்குநர் சுதா கொங்கரா வீரியமாக வைத்த வசனங்களும் காட்சிகளும் கட் செய்யப்பட்டும், மியூட் செய்யப்பட்டும் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், படத்தை பார்த்த பலரும் படத்தில் வீரியமே இல்லை. வெறும் காதல் டிராமா படம் போலத்தான் உள்ளது என விமர்சித்து வருகின்றனர். இந்த அளவுக்கு படத்தில் காட்சிகளை சென்சார் குழு அனுமதித்ததே பெரிய விஷயம் என்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் படத்தை இன்னொரு பக்கம் கொண்டாடி வருகின்றனர்.

அவர்களும் மனிதர்கள் தான்: ஒரு பக்கம் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடிப்பது குறித்து திரைத்துறையில் ஏகப்பட்ட இயக்குநர்களும் பிரபலங்களும் தணிக்கை வாரியத்தை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், சென்சார் போர்டில் இருப்பவங்களுக்கும் சில விதிமுறைகள் இருக்கு, அவங்களும் மனுஷங்க தான், பராசக்தி படத்தில் கூட சில வார்த்தைகள் ஏன் மியூட் செய்யப்பட்டது என கேட்டார்கள், அது அவங்களுக்கு தப்பா தெரிஞ்சிருக்கலாம். அதனால், மியூட் செஞ்சிருப்பாங்க என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். தன்னுடைய படம் ரிலீஸ் ஆன சந்தோஷத்தில் சென்சார் போர்டுக்கு சாதகமாக சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். இதுவே பராசக்தி படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் கொடுக்கப்படவில்லை என்றால் அவர் இப்படி பேசியிருக்க மாட்டார் என்று விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











