சினிமாவில் உள்ள அரசியலை சமாளிக்கவே பாடுபடுறேன்.. முடியாத சிவகார்த்திகேயன் பிரச்னை.. யாரை சொல்றாரு?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடித்த மாவீரன் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படி வரிசையாக இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த அவர்; இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இதற்கிடையே சமீபகாலமாகவே சிவகார்த்திகேயனை சுற்றி சர்ச்சைகளும், விவாதங்களும் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருக்கின்றன.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. சில படங்கள் மட்டுமே இருப்பார்; பிறகு காணாமல் போய்விடுவார் என்று பலரும ஆரூடம் கூறினார்கள். ஆனால் ஆரூடம் கூறியவர்களை ஆஃப் செய்யும் விதமாக தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு படத்துக்கு படம் உச்சம் சென்றார். அதன் காரணமாக இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் எழுதுவது, பாடுவது என்று வேறு ஜானரிலும் பிஸியாக இருக்கிறார்.

வரிசையாக ஹிட்: சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த நான்கு படங்களில் பிரின்ஸ் படம் மட்டும் தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு அவர் நடித்த மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அயலான் திரைப்படம் லேட்டாக ரிலீஸானாலும் சிவாவுக்கு வெற்றியை கொடுத்தது. முக்கியமாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக களமிறங்கி அயலான் பந்தயம் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிவாவின் மவுசு மேலும் உயர்ந்தது.
அமரன்: மாவீரன், அயலான் என இரண்டு படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடித்ததை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் எஸ்கே. ராஜ்குமார் பெரியசாமி இயக்க; கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படமும் தனது கரியரில் மைல் கல்லாக இருக்கும் என்ற உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படமானது முன்னாள் இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. படம் அக்டோபரில் ரிலீஸாகிறது.
தொடர் விவாதங்கள்: பொதுவாக சிவகார்த்திகேயன் மீது க்ளீன் பாய் என்ற இமேஜ் எப்போதும் இருக்கும். ஆனால் சமீபகாலமாக அவரை பற்றி விவாதங்களும், சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. இசையமைப்பாளர் டி.இமான் விவகாரத்தில் ஆரம்பித்த சர்ச்சையும், விவாதமும் கடைசியாக கொடுக்காளி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் எஸ்கேவின் பேச்சில் வந்து நிற்கிறது.
எஸ்கே Vs தனுஷ்?: அதாவது கொட்டுக்காளி ட்ரெய்லர் லான்ச்சில் சிவகார்த்திகேயன் தனுஷைத்தான் தாக்கி பேசினார் என்று பலர் பேசினார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பது போல் இருவரும் சமீபத்தில் சந்திக்கவும் செய்தனர். மேலும் சிவகார்த்திகேயனை சினிமாவில் வளரவிடாமல் தடுப்பதற்கு கோலிவுட்டில் ஒரு கும்பலே செயல்படுகிறது என்பதும் ஒருதரப்பினரின் கருத்தாக நீண்ட நாட்கள் இருந்துவருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் அதைப் பற்றி எங்கும் வாய் திறக்கவில்லை.
சினிமாவில் இருக்கும் அரசியல்: இந்நிலையில் தனியார் சேனல் ஒன்று நடத்திய விருது விழாவில் பேசிய எஸ்கேவிடம், அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், 'சினிமாவில் இருக்கும் அரசியலை சமாளிக்கவே நான் பெரும்பாடு படுகிறேன். சினிமாவில் இவ்வளவு அரசியல் இருப்பதால்தான் சினிமா நடிகர்கள் அரசியலுகு சென்று அரசியல் செய்கிறார்களோ என்று எனக்கு தோன்றும். எனக்கு சினிமாவில் இருக்கும் அரசியலே போதும்"" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அய்யய்யோ சிவா யாரை சொல்கிறார்.அப்போ உண்மையில் அவரை காலி பண்ண அரசியல் நடந்துகொண்டுதான் இருக்கிறதா. இப்போதைக்கு இந்தப் பஞ்சாயத்து முடியாது போல என்று ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











