Sivakarthikeyan - காதலிக்க பிளான் போட்ட சிவகார்த்திகேயன்.. ஸ்கெட்ச் போட்டு காலி செய்த அவரது தாய்
சென்னை: சிவகார்த்திகேயனுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது நடனம், நடிப்பு மூலம் பலரையும் கவர்ந்திருக்கும் அவர் தற்போது தனது 21ஆவது படத்தில் நடித்துவருகிறார். அதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கமல் ஹாசன் தயாரித்துவருகிறார். இந்த சூழலில் அவரது காதல் மற்றும் திருமணம் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
சின்னத்திரையில் தோன்றி தற்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் சென்றுகொண்டிருக்கும் அவருக்கு சிறுவர்கள்,சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனுக்கான வியாபாரம் பெருகியது.

அடிவாங்கிய பிரின்ஸ்: வரிசையாக இரண்டு படங்கள் 100 கோடி வசூலில் இணைந்ததால் அனூதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்தது. மேலும் அப்படம் பைலிங்குவலாக உருவானதால் தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்கு போட்டிருந்தார் சிவா. ஆனால் அவரது கணக்கை தவிடுபொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படத்தை ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டார்கள்.
மாவீரன் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் கொடுத்த அடிக்கு மருந்தாக மாவீரன் இருக்கும் என நம்பியிருந்தார் சிவகார்த்திகேயன். அதற்கேற்றபடி மாவீரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் சிவகார்த்திகேயனின் நடிப்பு அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக மாவீரன் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் பேசிய அவர், இந்த முறை மிஸ் ஆகாது என்று பேசியிருந்தார். அதேபோல் படமும் ஹிட்டானது.
கமல், சிவகார்த்திகேயன்: மாவீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தற்போது மும்முரமாக நடந்துவருகிறது. அடுத்ததாக அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ்டர் க்ளீன்: சிவகார்த்திகேயனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று சொல்வது உண்டு. அதனாலேயே கோலிவுட்டில் மிஸ்டர் க்ளீன் என்று பெயர் எடுத்திருப்பவர். இருந்தாலும் இசையமைப்பாளர் இமான் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றி சிவகார்த்திகேயனின் மிஸ்டர் க்ளீன் இமேஜை கொஞ்சம் அசைத்து பார்த்தது. ஆனால் சிவாவின் ரசிகர்களோ, இதெல்லாம் திட்டமிட்டு அவதூறு பரப்புவது என்றனர்.
சிவாவின் பேட்டி: இந்த சூழலில் காதல் மற்றும் தனது திருமணம் குறித்து சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "எனக்கு 21 அல்லது 22 வயது இருக்கும்போது ஒன்று நினைத்தேன். அதாவது இந்த வயதில் காதலிக்க ஆரம்பித்துவிடலாம் என்பதுதான் அது. ஆனால் அதெல்லாம் நீ ஒன்றும் செய்து கிழிக்க வேண்டாம் நான் ஒரு பெண்ணை பார்த்து வைத்திருக்கிறேன். உன் மாமாவின் மகள்தான் அவர். அவரையே திருமணம் செய்துகொள் என்று சொல்லிட்டாங்க""என்றார்.
சிவகார்த்திகேயன் குடும்பம்: முன்னதாக சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். மகன் சில காலத்துக்கு முன்னர்தான் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications










