அஜித் மற்றும் விக்ரமுக்கு அடுத்து நீங்கள்தான்.. சிவகார்த்திகேயனிடம் ஓபனாக சொன்ன மனைவி ஆர்த்தி
சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட அந்தப் படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. உலகளவில் மொத்தம் 350 கோடி ரூபாய் வசூலித்தது. சிவா இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
அரசியலில் கவனம் செலுத்திவருவதால் சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கிறார் விஜய். அவர் கடைசியாக நடித்த GOAT படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோல் செய்திருந்தார். அதில் சிவாவிடம் விஜய் துப்பாக்கியை கொடுத்து க்ரவுண்டில் இருக்கும் லட்சக்கணக்கான உயிர்களோட பொறுப்பு இனி உங்களுடையது என்கிற வசனத்தை பேசினார். அதனையடுத்து அடுத்த விஜய் கோலிவுட்டில் சிவகார்த்திகேயன்தான் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறினார்கள்.

அமரன் மெகா ஹிட்: அதற்கேற்றபடி சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த அமரன் திரைப்படம் மெகா ஹிட்டானது. கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. மேலும் உலகளவில் மொத்தம் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உச்சத்துக்கு சென்றிருக்கிறது. அவர் தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த படம்: அமரன் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துவருகிறார். முதலில் புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் விலகினார். அதனையடுத்து எஸ்கே, ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் கமிட்டாகியிருக்கின்றனர். படத்துக்கு 1965 என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. ஷூட்டிங்கும் மும்முரமாக நடந்துவருகிறது.
சிவகார்த்திகேயன் பேட்டி: இதற்கிடையே சிவகார்த்திகேயன் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "எனக்கு எதிராக எப்போதும் ஒரு க்ரூப் செயல்பட்டுக்கொண்டே இருக்கும். எனது படம் நன்றாக இருந்தால் என்னை தவிர்த்து மற்றவர்களை பாராட்டுவார்கள். அதுவே நன்றாக இல்லை என்றால் முழுக்க முழுக்க என்னை விமர்சனம் செய்வார்கள். எனது வெற்றி என்பது அவர்களுக்கான பதிலடி இல்லை. எனது ரசிகர்களுக்காக எனது வெற்றி"" என்றார்.
மனைவி சொன்ன வார்த்தை: இந்நிலையில் அதே பேட்டியில் சிவா பேசியிருக்கும் இன்னொரு விஷயமும் ட்ரெண்டாகியிருக்கிறது. அப்போது அவர் பேசுகையில், ""சினிமாவை விட்டு விலகிவிடலாம் என்று மூன்று வருடங்களுக்கு முன்பே முடிவெடுத்தேன். ஆனால் அப்போது எனது மனைவி ஆர்த்தி என்னிடம் அஜித் மற்றும் விக்ரமுக்கு பிறகு கடந்த 20 வருடங்களில் சினிமா பின்புலம் இல்லாமல் வந்து சாதித்தவர்கள் யாரும் இல்லை. நீங்கள்தான் அதை செய்திருக்கிறீர்கள். அது சாதாரண விஷயம் இல்லை. அதனால் இதை விட்டுவிட வேண்டாம். உங்களுக்கு கிடைத்த புகழை கொண்டாடுங்கள் என கூறினார். அதனால் அந்த முடிவிலிருந்து நான் பின் வாங்கினேன்""என்றார்.


Click it and Unblock the Notifications











