சிவகார்த்திகேயனின் அடுத்த படம்.. ஜோடியாகும் சென்சேஷனல் நடிகை?.. சூப்பரா இருக்குமே

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பராசக்தி திரைப்படம் விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் வசூலில் நூறு கோடி ரூபாய் அள்ளிவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அடுத்ததாக அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஆனால் அந்தப் படம் தொடங்குவதற்கு தாமதம் ஆகும் சூழ்நிலை இருப்பதால் தாய் கிழவி இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்போடு கடந்த மாதம் வெளியானது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்பதால் கண்டிப்பாக பெரிய சம்பவம் செய்யும் என நம்பிக்கை இருந்தது. பற்றாக்குறைக்கு ரவி மோகன் வில்லன் அவதாரமும் எடுத்திருந்தார். ஆனால் படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

என்ன பிரச்னை?: படத்தின் கதைக்களம் தீவிரமானதாக இருந்தாலும் அதை ப்ரெசண்ட் செய்த விதத்தில் இயக்குநர் சொதப்பிவிட்டார் என பலரும் கூறினார்கள். அதேசமயம் சென்சார் அதிகாரிகள் ஏகப்பட்ட இடங்களில் கொடுத்த கட்டும், மியூட்டும்தான் படம் சொதப்புவதற்கு காரணம் எனவும் எஸ்கே ரசிகர்கள் கூறினார்கள். விமர்சன ரீதியாக படம் அப்படி இப்படி ரிசல்ட்டை பெற்றாலும் வசூலில் சக்கைப்போடு போட்டு நூறு கோடி ரூபாய் வசூலித்தது.

Sivakarthikeyan to Team Up with Thaai Kizhavi Director After Parashakti Bhagyashree Borse Heroine
Photo Credit:

எஸ்கேவின் அடுத்த படம்: பராசக்தியை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க தயாராக இருந்தார் சிவா. அந்தப் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சைன்ஸ் ஃபிக்‌ஷன் சப்ஜெக்ட்டை வெங்கட் கையில் எடுத்திருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு இன்னும் காலம் ஆகலாம் என்பதால் சிவகார்த்திகேயன் ஒரு முடிவு எடுத்திருப்பதாக கடந்த சில வாரங்களாக ஒரு தகவல் ஓடுகிறது.

என்ன தகவல்?: அதாவது தனது எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் மூலம் தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார் அவர். அந்தப் படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் என்ற புதுமுகம். தாய் கிழவி படத்தை சமீபத்தில் சிவா பார்த்ததாகவும்; அது அவரை வெகுவாக கவர்ந்துவிட்டதால்; குறுகிய கால படமாக சிவக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்திருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ இன்னும் சில நாட்களில் வரும் என்றும் திரைத்துறையிலிருந்து தகவல்கள் பறக்கின்றன.

ஹீரோயின் யார்?: இந்நிலையில் அந்தப் படத்தின் ஹீரோயின் குறித்தும் புதிய செய்தி வந்திருக்கிறது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸை கதாநாயகியாக நடிக்க வைக்க இயக்குநர் திட்டமிட்டிருப்பதாகவும்; சமீபத்தில்தான் அவரை சந்தித்து கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாளிலேயே ஹீரோயின் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுவிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. பாக்யஸ்ரீ நடிக்கும்பட்சத்தில் இதுதான் அவரது முதல் நேரடி தமிழ் படமாக இருக்கும். ஏற்கனவே காந்தா படத்தில் அவர் தரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X