Sivakarthikeyan - சிவகார்த்திகேயனை உழைக்க வைப்பது அதுதானாம்.. அவரே சொன்ன விஷயத்தை பாருங்க
சென்னை: சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்து வசூலிலும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. தற்போது அவர் தனது 21ஆவது படமான அமரன் படத்தில் நடித்துவருகிறார். விஜய் அரசியலுக்கு சென்றிருப்பதால் அவரது இடத்தை நிரப்புவதற்கு சிவகார்த்திகேயன் மட்டும்தான் இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

அடுத்த படங்கள்: அயலான் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் அதற்கு முன்னதாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
வசூல் வேட்டை: இந்த பொங்கல் ரேஸ் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமானதாகவே கருதப்பட்டது. ஏனெனில் அயலான் திரைப்படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தனுஷால் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். எனவே இதில் தனுஷை சிவா வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் வென்றுவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். ஏனெனில் அயலான் திரைப்படத்தின் வசூல் 75 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.
எதிர்பார்ப்பில் அமரன்: அமரன் படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்துள்ளன. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன் படத்தின் பெயர், டீசர், போஸ்டர்கள் என அப்டேட்டுகளாக குவிந்து ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் பயோபிக்காக இப்படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நெகிழ்ச்சி சிவகார்த்திகேயன்: இந்நிலையில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியோடு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "எனது அன்பான ரசிகர்களான சகோதர, சகோதரிகளுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக அன்புகளையும் வாழ்த்துகளையும் நிரப்பிய உங்களுக்கும், நலத்திட்ட உதவிகளை செய்த அனைவருக்கும் எனது நன்றி. இந்த அளவு கடந்த அன்புதான் என்னை இன்னும் கடினமாக உழைக்க வைக்கிறது. மீண்டும் ஒருமுறை இதயம் கனிந்த நன்றி.
அனைவருக்கும் நன்றி: என் மீது அன்பை பொழிந்த மற்ற நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் நன்றி. அமரன் டீசர் வெளியீட்டு நாளை மறக்க முடியாது. படத்தின் தயாரிப்பாளர் கமல், சோனி பிசர், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மகேந்திரன் மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்குமே எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











