அட நம்ம சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு தமிழ் பற்றா?.. செமயா செஞ்சிருக்காரே ப்பா.. வேற லெவல் போங்க
சென்னை: சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அமரன் படம் கொடுத்த வெற்றி அவரை இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறது. அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இரண்டு படங்களுமே பான் இந்தியா அளவில் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் சமீபத்தில் அவர் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
சின்னத்திரையில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்று அதன் மூலம் கவனம் ஈர்த்து; பிறகு அந்த சேனலிலேயே தொகுப்பாளராக பணியாற்றிய சிவகார்த்திகேயன்; மெரீனா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதேபோல் தனுஷுடன் 3 படத்திலும் நடித்தார். தொடர்ந்து ஹீரோவாக நடித்த அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய இரண்டு படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. மேலும் அவரை கவனிக்கத்தக்க ஹீரோவாகவும் மாற்றின.

மெகா ப்ளாக் பஸ்டர்: அந்தப் படங்களுக்கு பிறகு சிவா தொட்டதெல்லாம் ஹிட்டாக ஆரம்பித்தன. அந்தவகையில் டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே நூறு கோடி ரூபாயை வசூலித்தன. முக்கியமாக அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய்வரை வசூலித்து சாதனை படைத்தது. அந்த மெகா வெற்றிக்கு பிறகு அவரது சம்பளமும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராகவும்; சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் ஹீரோவாகவும் உயர்ந்து நிற்கிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்: அடுத்ததாக அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய படங்களில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில்தான் அவர் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி எமோஷனலாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
சிவாவின் அறிக்கை: அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "என்னுடைய பிறந்தநாளில் பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்து அதை மறக்க முடியாத நாளாக மாற்றிய அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி, இணையதள, சமூக ஊடகங்கள், பண்பலை நண்பர்களுக்கும் அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்குமென்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள். மதராஸி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட படக்குழுவுக்கும் அதற்கு அனைவரும் அளித்த பேராதரவிற்கும் நன்றி.
திருப்பி தருவேன்: தற்போது படப்பிடிப்பில் உள்ள பராசக்தி படக்குழுவின் வாழ்த்துகளுக்கும், அன்புக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னுடைய அன்பு ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்தையும் நிரப்பியதோடு; மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்களை செய்திருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் எனது முழு மனதுடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தர முன்பைவிடவும் இன்னும் அதிகமாக உழைப்பேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது இந்த அறிக்கையை பார்த்த ரசிகர்கள் இன்னொரு விஷயத்துக்காகவும் அவரை பாராட்டிவருகிறார்கள். அதாவது இந்த அறிக்கையின் தமிழ் பதிப்பின் இறுதியில் தன்னுடைய கையெழுத்தை தமிழில் போட்டிருக்கிறார். அதனை கவனித்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு செமயான தமிழ் பற்று இருக்கே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











