Don't Miss!
- Sports
நிறைய தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு பிறகு கலங்கிய ராகுல்.. துள்ளிகுதித்த டுபிளஸிஸ்
- Finance
சென்னை நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்: என்ன பயன் ஏற்படும்?
- News
திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி! ஏர்போர்ட்டில் வரவேற்கும் முதலமைச்சர்!
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்!
சென்னை : சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியான அண்ணாத்த படத்தை இயக்கியிருந்தார் சிறுத்தை சிவா
தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ள சூழலில் அடுத்ததாக சூர்யாவுடன் சிறுத்தை சிவா கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி சிறுத்தை சிவா அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் அடுத்து கைகோர்க்க போவது கமலுடனா, மணிரத்னத்துடனா ?

அண்ணன்-தங்கை பாசத்தை
மசாலா தூக்கலான கமர்ஷியல் படங்களை இயக்குவதில் தனிச்சிறப்பு பெற்ற சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. சிறுத்தைக்கு பிறகு இயக்கிய அனைத்து திரைப்படங்களும் நடிகர் அஜித்துடன் இணைந்து பணியாற்றிய சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன்முறையாக இணைந்த திரைப்படம் அண்ணாத்த. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் . மேலும் குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்க கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

முதல் கட்ட பணிகள் விரைவில் தொடங்க
இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் வஞ்சனையில்லாமல் கல்லா கட்டிய அண்ணாத்த வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவை இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சிறுத்தை சிவா சூர்யா இணையும் படத்தின் முதல்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தப் படமும் குடும்ப பின்னணியில் சென்டிமென்ட் திரைப்படமாக உருவாகிறது என கூறப்படுகிறது

அடுத்து சிவகார்த்திகேயன் உடன் இணைய
சூர்யாவுடன் இணையும் திரைப்படத்தை அடுத்து சிறுத்தை சிவா நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து அயலான் மற்றும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்
இந்த நிலையில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா கூட்டணியில் சூர்யா நடிக்கும் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.