சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படம்... லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஒரு வழியாக அக்டோபர் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார்.

டான் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அக்டோபர் 9

அக்டோபர் 9

தொடர்ந்து கமர்சியல் ஹிட்டுகளை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் வேலைக்காரன் என்ற வித்தியாசமான படத்தை கொடுத்து அனைவரையும் வியக்க வைத்தார். அதைத் தொடர்ந்து இப்பொழுது டாக்டர் என்ற திரைப்படமும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிறது. கோலமாவு கோகிலா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமர் டாக்டர் படத்தை இயக்கி இருக்க பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அனைத்தும் தள்ளிப்போக இறுதியாக அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா அருள் முருகன்

பிரியங்கா அருள் முருகன்

இதையடுத்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். கல்லூரி கதைக்களத்தில் உருவாகும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக கோயம்புத்தூரில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்று வந்தது. எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி,பாலசரவணன், சிவாங்கி, விஜய் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். டாக்டர் படத்தை தொடர்ந்து பிரியங்கா அருள் முருகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

டப்பிங் பணிகள்

டப்பிங் பணிகள்

டான் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து இப்பொழுது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. விரைவிலேயே டீசர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பற்றிய புதிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

சிங்கப்பாதை

சிங்கப்பாதை

இயக்குனர் அட்லி இடம் உதவி இயக்குனராக புரிந்த அசோக் என்பவர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார் என தெரிய வந்துள்ளது. மேலும் அப்படத்திற்கு "சிங்கப்பாதை" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரட்டை வேடத்தில்

இரட்டை வேடத்தில்

சிவகார்த்திகேயன் ஏற்கனவே ரஜினி முருகன் மற்றும் சீமராஜா உள்ளிட்ட படங்களில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். ஆனால் ஒரு சில காட்சிகள் மட்டுமே தோன்றுவார். ஆனால் சிங்கப் பாதை படத்தில் படம் முழுவதும் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X