Top 5 Best Actors: இந்த ஆண்டு நடிப்பால் ரசிகர்களை அசரடித்த டாப் 5 நடிகர்கள்.. முதலிடம் யாருக்கு?

சென்னை: நல்ல நடிகர்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் கமர்ஷியல் வெற்றி பெறும் படங்களில் நடிகர்களின் நடிப்புத் திறன் பெரிதாக வெளிப்படாமல் வெறும் மாஸ் மட்டுமே காட்டி படங்களை ஓட்டி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகள் காலம் காலமாக இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதையெல்லாம் தாண்டி நல்ல நடிப்பை வெளிப்படுத்தி விமர்சன ரீதியாகவும் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் சில நடிகர்கள் பிடித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

2024ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களும் வெளியாகி உள்ள நிலையில், போட்டி பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல டாப் ஹீரோக்களின் படங்களும் அவர்களின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவராமல் போனது அதிர்ச்சியை தான் தந்தது.

year ender 2024 new year 2025 best actors 2024 2024 2025

இந்த ஆண்டு தனது கடுமையான நடிப்பால் ரசிகர்களை வியக்க வைத்த டாப் 5 கோலிவுட் நடிகர்கள் குறித்து இந்த ஆண்டு இறுதிப் பட்டியலில் பார்க்கலாம் வாங்க..

5. சூரி: கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி இந்த ஆண்டு நடிப்பில் வேறு ஒரு உச்சத்துக்கே சென்றிருந்தார். கருடன் திரைப்படம் அவரது நடிப்பை மக்கள் மத்தியில் இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றது. வசூல் ரீதியாகவும் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. கொட்டுக்காளி படத்தில் அந்த ஆட்டோவுக்குள் சென்று முறைப்பெண் அன்னா பென்னை மட்டுமின்றி அத்தனை பேரையும் அடிக்கும் காட்சிகள் அட்டகாசம். விடுதலை 2 படத்தில் கிளைமேக்ஸில் அந்த ஜீப்பை அந்தரத்தில் விட்டுச் சென்று தனக்கு கிடைத்த கொஞ்ச நேரக் காட்சியில் கூட ஸ்கோர் செய்த சூரி வரும் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் தரமான நடிகராக வலம் வருவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

year ender 2024 new year 2025 best actors 2024 2024 2025

4. அட்டகத்தி தினேஷ்: கோட் படத்தில் விஜயகாந்த் கெட்டப்பிலேயே விஜய் தோன்றினாலும் ரசிகர்கள் கிரிக்கெட் மட்டையை எடுத்து அக்குளில் சொருகிக் கொண்டு கர்ச்சிப்பை சுற்றிக் கொண்டே நடந்து வந்த கெத்து தினேஷை தான் இந்த ஆண்டு கொண்டாடினர். லப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக இருந்தாலும், படத்தின் மெயின் ஹீரோ மற்றும் "நீ பொட்டு வச்ச தங்கக் குடம்" என ரசிகர்கள் கொண்டாடியது அட்டக்கத்தி தினேஷின் நடிப்பை பார்த்துதான்.

year ender 2024 new year 2025 best actors 2024 2024 2025

3. விஜய் சேதுபதி: லக்‌ஷ்மியை காணோம் என குப்பைத் தொட்டி தொலைந்து போனதாக புகார் அளிக்க வந்து தவறு செய்த போலீஸாரையே கண்டுபிடிக்க தகப்பன் நடத்திய நாடகம் இந்த ஆண்டு இந்திய ரசிகர்களை தாண்டி சீன ரசிகர்களையும் கண் கலங்க வைத்து கல்லாவை நிரப்பி வருகிறது. விடுதலை 2 படத்தில் பெருமாள் வாத்தியாராக கருப்பனுக்கு சாவே இல்லைடா என வெடித்துச் சிதறும் இடத்திலும், என்னை நிர்வாணமாக்கிட்டா நீ பெரிய ஆளா என கெத்தாக கால் மேல் கால் போட்டு அமரும் இடத்தில் எல்லாம் விஜய் சேதுபதி மெய் சிலிர்க்க வைத்துவிட்டார்.

year ender 2024 new year 2025 best actors 2024 2024 2025

2. சியான் விக்ரம்: பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படத்திற்காக தனது ஒட்டுமொத்த உடல் உழைப்பையும் கொட்டி மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சியான் விக்ரம். மிகப்பெரிய வெற்றியை அந்த படம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், சில திரைக்கதை சிக்கல்கள் காரணமாக அந்த படம் பெரிதாக போகவில்லை என்றாலும், இந்த ஆண்டு விக்ரம் நடித்த நடிப்பை பார்த்து மிரண்டு போகாத இந்திய நடிகர்களே இருக்க முடியாது.

year ender 2024 new year 2025 best actors 2024 2024 2025

1. சிவகார்த்திகேயன்: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படத்தின் மூலம் மேஜர் முகுந்த் வரதராஜன் எனும் ராணுவ வீரரை மட்டுமின்றி தேசத்துக்காக போராடும் பல லட்சம் ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட்டாக ஒரு படத்தைக் கொடுத்து அதை மிகப்பெரிய வெற்றியடைய தனது உடல் உழைப்பு மற்றும் நடிப்பைக் கொட்டி முகுந்த் வரதராஜனை அப்படியே பிரதிபலித்த சிவகார்த்திகேயன் தான் ஒரு கமர்ஷியல் ஹீரோ மட்டுமில்லை. நல்ல நடிகரும் கூட என இந்த ஆண்டு நிரூபித்திருக்கிறார். வெறும் மசாலா படத்தை மட்டும் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றாமல் நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மதித்து தமிழ் சினிமாவின் அடுத்த உச்ச நட்சத்திரமாக மிளிர வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

year ender 2024 new year 2025 best actors 2024 2024 2025

ஸ்பெஷல்: ஜமா போன்ற படங்கள் ஹாலிவுட்டில் வெளியானால் அதற்கான ரசிகர்களே தனி என்று சொல்லலாம். அறிமுக இயக்குநரும் நடிகருமான பாரி இளவழகன் தமிழ்நாட்டின் தெருக்கூத்து கலையை கையில் எடுத்துக் கொண்டு எந்தவொரு நடிகரும் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் அசத்தி ஏகப்பட்ட ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்க முடியவில்லை என்றாலும் ஓடிடியில் பார்த்துவிட்டு ஓஹோ என பாராட்டும் அளவுக்கு நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

year ender 2024 new year 2025 best actors 2024 2024 2025

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X