நயன்தாராவுக்காக பாட்டு பாடிய விக்னேஷ் சிவன்.. யார போனு சொல்றீங்க?.. கலாய்த்துவிட்ட சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். அவர் இதுவரை 75 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது மண்ணாங்கட்டி படத்தை தமிழில் முடித்திருக்கிறார். மேலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். இவை தவிர்த்து ஹிந்தியிலும் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் சைமா விருது விழாவில் பாடல் பாடியதை அடுத்து அதனை சிவகார்த்திகேயன் கலாய்த்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

கேரளாவில் பிறந்தவர் மரியம் டயானா. தமிழில் ஐயா படத்தில் நயன்தாரா என்ற பெயரோடு அறிமுகமானார். ஹரி இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நயனின் அழகும் திறமையும் கோலிவுட்டை கவர்ந்ததை அடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதையடுத்து நயனின் கரியரில் வாய்ப்பு மழை பொழிந்தது.

nayanthara sivakarthikeyan vignesh shivan

முன்னணி நடிகை: அதன்படி விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். குறிப்பாக கிளாமர் ரோல்களை எந்தவித தயக்கமுமின்றி செய்ததன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சூழல் இப்படி இருக்க அவரது வாழ்க்கையில் சில பிரச்னைகள் வந்ததைத் தொடர்ந்து நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். பிறகு ராஜா ராணி, அறம், நானும் ரௌடிதான் என தனது செகண்ட் இன்னிங்ஸை ஃபுல் பார்மோடு தொடங்கினார்.

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்த நயன்; பல வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு விக்னேஷை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது.

பிஸி நடிகை: திருமணமாகிவிட்டால் நடிப்பதற்கு தயங்கும் நடிகைகளுக்கு மத்தியில் நயன் அதை உடைத்துக் காட்டினார். தொடர்ந்து நடித்துவரும் அவர் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் அறிமுகமானார். அந்தப் படமும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டது. தொடர்ந்து தமிழிலும் கவனம் செலுத்திவரும் அவர்; கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கிறார்.

சைமா நயன்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் அன்னபூரணி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன் பெற்றுக்கொண்டார். அந்த விழாவில் நயனை அருகில் வைத்துக்கொண்டு போனா என்ன என்ற பாடலை விக்னேஷ் சிவன் உருக்கத்துடன் பாடினார். அது அங்கிருந்தவர்களையும், ரசிகர்களையும் வெகுவாகவே கவர்ந்தது என்று சொல்லலாம். மேலும் அதுதொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது.

கலாய்த்த சிவா: இந்நிலையில் அதே விழாவில் நடந்த இன்னொரு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றும் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது விக்னேஷ் சிவன் மேடையை விட்டு கீழே வந்த பிறகு சிவகார்த்திகேயன் மேடையில் ஏறினார். அப்போது விக்னேஷ் சிவன் பாடியதை குறிப்பிட்டு பேசிய அவர், 'போனா என்ன' என்று விக்னேஷ் சிவன் பாடினார். அது நயனுக்காக பாடினாரா இல்லை இங்கு வந்திருக்கும் ஆடியன்ஸை பார்த்து பாடினாரா என்று தெரியவில்லை' என குறிப்பிட்டார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அட நம்ம எஸ்கே போறபோக்குல கலாய்த்துவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X