அஜித், சூர்யாவுக்கு செம டஃப் கொடுக்கும் சிவகார்த்திகேயன்.. அடுத்த பாக்ஸ் ஆபீஸ் கிங் இவர்தானா?

சென்னை: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என தியாகராஜ பாகவதரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதன் பின்னர் எம்ஜிஆர் மக்கள் திலகமாக மாறி பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக பல ஆண்டுகள் இருந்தார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் போட்டிப் போட்டு வசூல் வேட்டை நடத்தினர். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக கோலிவுட்டில் இன்னமும் தனது கொடியை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார். கமல்ஹாசனும் விக்ரம் படம் மூலம் கம்பேக் கொடுத்து கல்லாவை நிரப்பினார்.

தளபதி விஜய் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இணையாக வசூல் சாதனை படைக்கும் படங்களை களமிறக்கி வசூல் நாயகனாக மாறினார். ஜன நாயகன் படத்துடன் அவர் கோலிவுட்டுக்கு டாட்டா காட்டி கோட்டையை பிடிக்கும் கனவுகளுடன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Sivakarthikeyan Ajith Kumar Suriya

இந்நிலையில், அஜித் குமார் மற்றும் சூர்யாவுக்கு பாக்ஸ் ஆபீஸில் தற்போது சிவகார்த்திகேயன் சிம்ம சொப்பனமாக மாறியுள்ளார் என்கின்றனர். சூர்யா, அஜித் குமாரின் அடுத்த அடுத்த படங்களின் வசூலுக்கு சிவகார்த்திகேயனின் அடுத்த அடுத்த படங்களின் வசூல் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து இங்கே லேசாக அலசுவோம் வாருங்கள்.

குட் பேட் அக்லி அஜித்துக்கு கைகொடுக்குமா?: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படங்களிலேயே விஷாலை வைத்து அவர் இயக்கிய மார்க் ஆண்டனி படம் மட்டும் தான் 100 கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில், அஜித் குமாரை வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வருகிறது. தனுஷின் இட்லி கடை படமும் அதே நாளில் வெளியாக காத்திருக்கிறது. விடாமுயற்சி படத்தின் பாக்ஸ் ஆபீஸ் தோல்வி குட் பேட் அக்லி படத்தின் மீது எதிரொலித்தால் பெரிய ஓபனிங் வர வாய்ப்பில்லை என்கின்றனர். குட் பேட் அக்லி படம் தான் அஜித்துக்கு இருக்கும் பெரிய அஸ்திரம் என்றும் அந்த படம் ஹிட் அடித்துவிட்டால் 200 முதல் 300 கோடி வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sivakarthikeyan Ajith Kumar Suriya

ஸ்பீடு எடுக்கும் சூர்யா: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி வெளியாகிறது. அந்த படம் சூர்யாவுக்கு பெரிய வெற்றியை கொடுக்குமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. கங்குவா படம் தோல்வியை தழுவிய நிலையில், கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் சூர்யா கம்பேக் கொடுப்பார் என்கின்றனர். அடுத்து ஆர்ஜே பாலாஜி படத்தில் நடித்து வரும் சூர்யா வெங்கி அட்லூரியின் இயக்கத்திலும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sivakarthikeyan Ajith Kumar Suriya

அடுத்த பாக்ஸ் ஆபீஸ் கிங் ரெடி: சூர்யா மற்றும் அஜித் குமாருக்கு பாக்ஸ் ஆபீஸில் இப்போதைக்கு பெரும் போட்டியாக இருப்பது சிவகார்த்திகேயன் தான் என்கின்றனர். அமரன் படம் 350 கோடி வசூல் செய்த நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி திரைப்படம் இந்த ஆண்டு வெளியானால் அந்த படத்தின் வசூல் 300 கோடிக்கும் மேல் செல்லும் என்கின்றனர். அந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்து வரும் பராசக்தி படத்தின் வசூல் 400 கோடி வரை செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். விஜய்க்கு அடுத்து கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக சிவகார்த்திகேயன் மாறி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

Sivakarthikeyan Ajith Kumar Suriya

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X