சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அந்தப் படம் ட்ராப் ஆகவில்லையாம்.. விவரம் என்ன?

சென்னை: சிவகார்த்திகேயன் கைகளில் இப்போது சேயோன் படம் இருக்கிறது. தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் அப்படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு இன்னொரு படத்திலும் அவர் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருந்த படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது. இந்நிலையில் அதுகுறித்து புதிய விவரங்கள் வெளியாகி எஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

அமரன் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டையே உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. அந்தப் படம் அவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதன் காரணமாக அவரிடமிருந்து வரும் ஒவ்வொரு படமும் அது மாதிரியே இருக்க வேண்டும் என பொறுப்பு அவருக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் உருவாகிவிட்டது. அந்த எதிர்பார்ப்போடுதான் மதராஸி, பராசக்தி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அவை இரண்டுமே சுமாரான வெற்றியைத்தான் பெற்றன.

Sivakarthikeyan Venkat Prabhu Film Not Dropped AR Rahman in Talks Project Still On Track
Photo Credit:

அடுத்த படம்: பராசக்திக்கு பிறகு இப்போது அவர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்துவருகிறார். இது பக்கா ரூரல் சப்ஜெக்ட்டாக உருவாகிறது. அண்மையில் வெளியான படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் அதன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். விக்ரமுக்கு எப்படி தில், தூள் படங்கள் அமைந்ததோ அதேபோல் எஸ்கேவுக்கு இந்தப் படம் அமையும் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை ஆகும்.

வெங்கட் பிரபு இயக்கத்தில்: இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார் எஸ்கே. அந்தப் படம் சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென அந்தப் படத்தின் வேலைகள் தொடங்கப்படவே இல்லை. ஒருகட்டத்தில் இந்தப் படத்தை ட்ராப் செய்துவிட்டார்கள் என்றும் தகவல்கள் வந்தன. இந்தப் படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து ரிலீஸாக ஒரு வருடம் ஆகிவிடும் என்பதால் இந்த ப்ராஜெக்ட்டை கைவிட்டுவிட்டார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.

தயாரிப்பாளர் ஷேரிங்ஸ்: ஆனால் வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் படம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியிருக்கும் விஷயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "இந்தப் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. கதையின் இறுதிக்கட்ட பணிகள் இப்போது நடந்துவருகின்றன. நான் முழுவதும் அந்தக் கதையை படித்தேன். இரண்டாவது பாதியில் மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ஏதேனும் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அந்த எண்ணம் இயக்குநருக்கும் இருந்தது. அதனால் அவர் கொஞ்சம் காலம் கேட்டார். இந்தத் திட்டம் இன்றும் ப்ராசஸில்தான் இருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X