சிவகார்த்திகேயனிடம் தொடர்ந்து தோற்கும் தனுஷ்?. நிலைமை இப்படி மோசமாக போகுதே
சென்னை: சிவகார்த்திகேயன் சினிமாவுக்குள் வருவதற்கு தனுஷும் ஒரு காரணம். அதன் காரணமாகத்தான் அவர் மீது அதீத மரியாதையை வைத்திருக்கிறார் எஸ்கே. ஆனால் இரண்டு பேருக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே மோதல் என்று இரண்டு பேரின் ரசிகர்களும் வாதம் செய்துகொள்கிறார்கள். அதுமட்டுமின்றி இருவரின் படங்களுடைய பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்டையும் ஒப்பிட்டு பார்த்து சோஷியல் மீடியாவில் களேபரத்தையே நிகழ்த்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு தனுஷுடன் பழக்கம் ஏற்பட்டது. சிவாவுக்கு திறமை இருக்கிறது என்பதை பழகியவுடன் உணர்ந்துகொண்ட தனுஷ் தனது 3 படத்தில் முக்கியமான ரோலை கொடுத்தார். ஆனால் சிவகார்த்திகேயன் திறமைக்கு அந்த ரோல் பற்றவில்லை என தெரிந்துகொண்டு தனது தயாரிப்பில் அவரை ஹீரோவாக எதிர்நீச்சல் திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. சிவாவின் கரியர் ஸ்ட்ராங்காக மாறியதற்கு காரணமான படங்களில் அதுவும் ஒன்று.

இரண்டு பேருக்கும் மோதலா?: சிவகார்த்திகேயன் தனது உடன்பிறவா சகோதரராக தனுஷை பார்த்தார். தனுஷும் அப்படித்தான் பழகினார். இப்படிப்பட்ட நிலைமையில் இரண்டு பேருக்குமிடையே அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்படுவதாகவும்; விரைவில் அவர்கள் தாக்கி பேசிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கோடம்பாக்க பட்சிகள் கூறின. ஆனால் அதை ஆரம்பத்தி மறுத்த அவர்களால் தொடர்ந்து பரவும் இதுபோன்ற தகவல்களை தடுக்க முடியவில்லை.
எஸ்கே பேச்சு: குறிப்பாக இந்த மோதல் ஆரம்பித்ததிலிருந்தே சிவகார்த்திகேயனுக்கு வாழ்க்கை கொடுத்ததே தனுஷ்தான் என்கிற ரீதியில் Dயின் ரசிகர்கள் பேசினார்கள். இதெல்லாம் எஸ்கேவின் கவனத்துக்கும் போயிருக்கும்போல. அதனால்தான் கொட்டுக்காளி திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், 'ஒருவருக்கு வாழ்க்கை கொடுத்ததே நான்தான் என எப்போதும் நான் சொல்லமாட்டேன்' என போட்டு தாக்கியிருந்தார். தனுஷையும், அவரது ரசிகர்களையும்தான் எஸ்கே இப்படி ஒரு பதிலடியை கொடுத்திருப்பதாக பலர் சொன்னார்கள்.
கேப்டன் மில்லர் Vs அயலான்: தனுஷின் மேனேஜரும் இட்லி கடை பட விழாவில் பேசிய பேச்சு சிவாவை தாக்கித்தான் என்றும் தகவல்கள் பறந்தன.இந்த மோதல் செய்திகளுக்கு சலங்கை கட்டிவிடும்படி கேப்டன் மில்லர் திரைப்படமும், அயலான் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸாகின. அதில் அயலான்தான் பெரிய வெற்றியை பெற்றது. அப்போதிருந்து எஸ்கேவின் பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டை தனுஷ் முறியடிக்க வேண்டும் என்பது ஒருதரப்பினரின் ஆசை. ஆனால் அது நடக்கும்படியாகவே தெரியவில்லை.
கர வசூலும் டல்தான்: உண்மையில் சொல்லப்போனால் சிவாவின் மார்க்கெட் தனுஷைவிடவும் பெரிதாகிவிட்டது. பாக்ஸ் ஆஃபிஸிலும் அவர் படங்கள் தொடும் நம்பர்கள் பெரிது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான கர திரைப்படமாவது சிவாவின் பட ரெக்கார்டுகளை உடைக்கும் என்று பரவலான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் கர படம் ரிலீஸாகி மூன்று நாட்களில் இந்திய அளவில் 18 கோடி ரூபாயையும், உலகளவில் 28.87 கோடி ரூபாயையும் வசூலித்திருக்கிறது. அதேசமயம் பராசக்தி திரைப்படம் முதல் நாளிலேயே 27 கோடி ரூபாயை அள்ளியது. இதை ஒப்பிட்டு பார்த்த ரசிகர்கள், எந்தப் படம் வந்தாலும் தனுஷால் சிவாவின் வசூலை முந்த முடியவில்லையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
