பராசக்தி நாயகன்.. மனைவியுடன் புத்தாண்டை வரவேற்க சிவகார்த்திகேயன் எங்கே போயிருக்காரு பாருங்க!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா நடித்துள்ள பீரியட் டிராமா போராட்ட படமாக பராசக்தி படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் இத்தனை ஆண்டுகள் ஹீரோவாக நடித்து வந்த ரவி மோகன் வில்லனாக மிரட்ட காத்திருக்கிறார். நடிகர் முரளியின் மகன் அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
பராசக்தி படம் வெற்றிப் பெற வேண்டும் என்றும் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள பிரம்மாண்ட சயின்ஸ் ஃபிக்ஷன் படமும் சக்சஸ் ஆக வேண்டும், 2025ம் ஆண்டு போல சந்தோஷமாக குடும்பத்துடனும் நேரத்தை செலவழிக்க வேண்டும் என முதல் நாளே மனைவி ஆர்த்தியுடன் சிவகார்த்திகேயன் கோயிலுக்குச் சென்று புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாரம் ஜனவரி 3, சனிக்கிழமை பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
வடபழனி கோயிலில் சாமி தரிசனம்: ஆங்கில புத்தாண்டை அதிகாலையில் வடபழனி முருகன் கோயிலில் மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்து கொண்டாடியுள்ளார். அதிகாலையில் லேசாக பெய்த மழையின் ஆசிர்வாதத்துடன் இந்த ஆண்டு இன்பமாக தொடங்கட்டும் என்றும் சிவகார்த்திகேயன் பதிவிட்டு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பராசக்தி ஆடியோ லான்ச்: ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்க டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பராசக்தி படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் கல்லூரியில் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜன நாயகனுக்கு போட்டி: வரும் ஞாயிற்றுக்கிழமை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாகவுள்ள நிலையில், அதற்கும் போட்டியாக இன்னமும் ஆடியோ லான்ச் நடக்காத நிலையில், இப்போதே வரும் ஞாயிற்றுக்கிழமை பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா 3 மணிக்கே ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளனர். மாலை 6.30 மணிக்கு ரஜினிகாந்தின் சந்திரமுகி படமும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா டிஆர்பி அதிகம் வருமா? அல்லது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பராசக்தி ஆடியோ லான்ச் டிஆர்பி அதிகம் வருமா? என்கிற போட்டியும் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











