பராசக்தி ஷூட்டிங்.. பொள்ளாச்சியில் சிவகார்த்திகேயன் என்ன செய்திருக்கிறார் பாருங்க
சென்னை: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் சக்சஸ்ஃபுல் கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்வரை உலகளவில் வசூல் செய்தது. மதராஸி படத்தில் நடித்து முடித்த எஸ்கே; இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்த திரையுலகம் ஆச்சரியத்தில்தான் இருக்கிறது. அதேசமயம் அவர் உழைப்பால்தான் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆச்சரியப்பட்டவர்கள் எல்லாம் இப்போது சிவாவின் வளர்ச்சி நியாயமானதுதான் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். இருப்பினும் அவர் மீது பொறாமைப்படுபவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற பேச்சும் பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
300 கோடி ரூபாய் க்ளப்பில் சிவா: அப்படி பொறாமைப்படுபவர்களை எல்லாம் மேற்கொண்டு எரிச்சலாக்கியது என்றால் அமரன் திரைப்படத்தின் மெகா ஹிட். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் உலகளவில் 300 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. அது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமில்லாமல்; சிவகார்த்திகேயனை டாப் 5 கமர்ஷியல் ஹீரோக்களுக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

உச்சம் சென்ற மர்க்கெட்: அதன் காரணமாக அவர் தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 30 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கிவந்த சிவகார்த்திகேயன், அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை 50 கோடி ரூபாய்க்கும் மேல் உயர்த்திவிட்டதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க ஹிந்தியில் நடிப்பதற்கான ஆஃபர்களும் எஸ்கேவுக்கு வருவதாகவும்; அதில் நடிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தீவிரமாக யோசிக்கிறார் எனவும் ஒரு பேச்சு ஓடுகின்றது.
பராசக்தி, மதராஸி: அமரன் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்க கமிட்டானார். முதலில் இப்படத்தில் சூர்யாதான் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து அவர் வெளியேற சிவா உள்ளே வந்தார். அவருடன் ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இதுதவிர்த்து முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இப்படமானது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
பராசக்தி ஷூட்டிங்: மதராஸி படத்தின் பணிகளை முழுவதும் முடித்துவிட்ட எஸ்கே; இப்போது பராசக்தி ஷூட்டிங்கில் மும்முரமாக கலந்துகொண்டிருக்கிறார். சிதம்பரம், இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஷூட்டிங் இப்போது பொள்ளாச்சியில் நடந்துவருகிறது. இந்நிலையில் ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சி சென்ற சிவா; அங்கு அமைந்திருக்கும் புகழ் பெற்ற கோயிலான மாசாணியம்மன் கோயிலுக்கு நேரில் சென்று வழிபட்டார். அவரை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்கள். இதுதொடர்பான வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











