சிவகார்த்திகேயனால் விஜய் இடத்தை பிடிக்க முடியாது? டாப் கியரில் சூர்யா, தனுஷ், சிம்பு வராங்க பாஸ்!
சென்னை: டான், பாஸ் என அடுத்தடுத்து டைட்டிலில் கெத்துக் காட்டி அடுத்த தளபதியாக சினிமாவில் விஜய் இடத்தை பிடித்து விடலாம் என சிவகார்த்திகேயன் எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால், அவ்வளவு எளிதாக எல்லாம் விஜய் இடத்தை சிவகார்த்திகேயனால் சுலபமாக நெருங்கி விட முடியாது என்றும் அந்த இடத்துக்கு வெறித்தனமான போட்டி தற்போது ஆரம்பித்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.
டாக்டர், டான் படங்கள் அடுத்தடுத்து 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர். நடிகர் விஜய்யின் ரூட்டில் அப்படியே நூல் பிடித்தது போல சிவகார்த்திகேயன் சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு செல்லப் போகிறேன் என அறிவித்த நிலையில், சிவகார்த்திகேயன் தான் கோலிவுட்டின் எதிர்காலமே என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

ஆனால், இங்கே சீனியர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அஜித் குமார் போன்ற மூன்று டிராகன்கள் இன்னமும் பட்டையைக் கிளப்பும் லைன் அப்களை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், சூர்யா, தனுஷ் மற்றும் சிம்பு உள்ளிட்ட ஹீரோக்களும் மெகா பட்ஜெட் படங்களில் நடித்து பெரிய போட்டிக்குள் குதித்துள்ளனர்.
கங்குவா கர்ஜிக்கும்: கடந்த சில ஆண்டுகளாக ஓடிடியில் படங்களை நேரடியாக சூர்யா வெளியிட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸில் விஜய், அஜித்துடனான போட்டியில் இருந்து ரொம்பவே பின்வாங்கியிருந்தார். ஆனால், இந்த முறை யார் வந்தாலும் தில்லாக பந்தயம் அடிக்கிறேன் என்கிற முடிவுடன் கங்குவா படத்தை வரும் ஆயுத பூஜைக்கும் வேட்டையன் படத்துக்குப் போட்டியாகவே களம் இறக்குகிறார். கண்டிப்பாக கங்குவா திரைப்படம் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் பேசும் போது கூட அதிக வசூலை ஈட்டும் படங்களில் கங்குவா மற்றும் கூலி படங்கள் இருக்கும் என்றார்.
தனுஷின் தாண்டவம்: தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் இந்த மாதம் ஜூலை 26ம் தேதி திரைக்கு வருகிறது. ராயன் திரைப்படம் வேறலெவலில் உருவாகியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மகாராஜா படத்திற்கு பிறகு மீண்டும் பாராட்டுக்களை குவிக்கும் படமாக இந்த ஆண்டு ராயன் இருக்கும் என்கின்றனர். மேலும், சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். அனைத்துக்கும் மேலாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமான இளையராஜா படத்தில் தனுஷ் நடித்து வரும் நிலையில், கூடிய சீக்கிரமே அவருடைய மார்க்கெட் உச்சத்துக்கு சென்று விடும் என தெரிகிறது. இப்பவே ஒரு படத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்குகிறார் என்கின்றனர்.
100 கோடி பட்ஜெட்டில் சிம்பு: கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் எஸ்டிஆர் 48 படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். மேலும், கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்திலும் சிம்பு லீடு ரோலில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து அவருக்கு இருக்கும் லைன் அப் காரணமாக அவரும் கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் இடத்தை பிடிப்பாரா சிவகார்த்திகேயன்?: இப்படி ஏகப்பட்ட போட்டி இருந்தாலும், விஜய் இடத்தை நோக்கிய அடிகளை கச்சிதமாகவே நடிகர் சிவகார்த்திகேயனும் வைத்து வருகிறார் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அமரன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் அடுத்து சூர்யா மிஸ் செய்த சுதா கொங்கராவின் புறநானூறு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், விஜய் இடம் என்பது அவருக்கான இடமாகவே இருக்கும். கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக பல நடிகர்கள் கோலிவுட்டில் இருந்து பான் இந்தியா அளவுக்கு வளர்ச்சி அடைந்தால் தமிழ் சினிமாவுக்கு வரப்பிரசாதம் தான்.


Click it and Unblock the Notifications











