சிவகார்த்திகேயனை அடுத்து இயக்கப்போகும் இயக்குநர் இவரா?.. கூட்டணி நல்லாத்தான் இருக்கும்
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் அவர் நடித்துவருகிறார். இரண்டு படங்களுமே தனது கரியரில் முக்கியத்துவம் உள்ள படங்களாக மாறும் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார். இதற்கிடையே சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவா நடிப்பதாக இருந்த படம் ட்ராப்பாகிவிட்டதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டில் கடந்த சில மாதங்களாக சென்சேஷனலாக இருப்பவர் சிவகார்த்திகேயன். அதற்கு காரணம் அவர் கடைசியாக நடித்திருந்த அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. உலகளவில் மொத்தம் 350 கோடி ரூபாய்வரை அந்தப் படம் வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

உயர்ந்த சம்பளம்: இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் அதிரிபுதிரியாக உச்சம் சென்றிருக்கிறது. அமரன் மற்றும் அதற்கு முன்பு நடித்த அயலான், மாவீரன் படங்களில் அவர் 10லிருந்து 20 கோடி ரூபாய்வரை சம்பளம் பெற்றதாகவும்; அமரன் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை 50 கோடி ரூபாய்வரை உயர்த்திவிட்டதாகவும் கடந்த சில மாதங்களாகவே பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியத்தில் இருக்கிறது.
அடுத்த படம்: சிவகார்த்திகேயனின் லைன் அப்பை பொறுத்தவரை தரமாகவே இருக்கிறது. அமரன் வெற்றி கொடுத்த உற்சாகத்தோடு முருகதாஸ் படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இன்னும் சில நாட்களில் தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸுக்கு கடந்த சில வருடங்களாக வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. எனவே எஸ்கேவை வைத்து இத்தனை வருட பசிக்கு தீனி போட்டுக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறார் அவர்.
பராசக்தி: அதேபோல் சூர்யாவை வைத்து புறநானூறு படத்தை சுதா கொங்கரா இயக்குவதாக இருந்தார். ஆனால் சூர்யா படத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை அணுகினார் சுதா. சிவாவும் ஒத்துக்கொண்டதை தொடர்ந்து புறநானூறு படம் பராசக்தி என்று பெயர் மாறியிருக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் சக்கைப்போடு போட்டிருக்கிறது. நிச்சயம் இந்தப் படமும் சிவகார்த்திகேயனின் கரியரில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.
அஹமதுடன் கூட்டணி: இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் அஹமது சமீபத்தில் சிவாவை சந்தித்து கதை சொன்னதாகவும்; அது அவருக்கு பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இரண்டு பேரும் இணையவிருக்கிறார்கள் என்கிற அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகலாம் என்றும் கோலிவுட்டிலிருந்து தகவல்கள் பரவுகின்றன.


Click it and Unblock the Notifications











