Don't Miss!
- Finance
16 வயது இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலை கொடுத்த நிறுவனம்: சம்பளம் எவ்வளவு தெரியுமா?
- Automobiles
ஹூண்டாய் க்ரெட்டாவிலும் என்-லைன் வேரியண்ட்டா!! முதல் டீசர் வெளியீடு - இந்தியாவில் அறிமுகமாகுமா?
- News
"ஐஏஎஸ் ஆபீசரா அவங்க?" சேலையை தூக்கி சொருகி.. சகதிக்குள் இறங்கி.. வெள்ள மீட்பு பணியில் பெண் அதிகாரி!
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Technology
Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்.. ஆரஞ்சு நிறத்தில் அட்டகாச லுக்.. எப்போ வாங்கலாம்?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவகார்த்திகேயன் அடுத்து கைகோர்க்க போவது கமலுடனா, மணிரத்னத்துடனா ?
சென்னை : யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். சாதாரணமாகவே சிவகார்த்திகேயன் படம் என்றால் எதிர்பார்ப்பு இருக்கும். இந்நிலையில் டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
எனக்கு
பெற்றோர்
இல்லை
என்று
நான்
கவலைப்பட்டதே
இல்லை
மாமா...
சஞ்சீவின்
அக்கா
மகள்
உருக்கம்!
இரண்டு வருட காத்திருப்பிற்கு பிறகு ரிலீசான சிவகார்த்திகேயன் படம் என்பதால் டாக்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களை இனியும் காக்க வைக்காமல் இருக்க சிவகார்த்திகேயனும் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி, பிஸியாக நடித்து வருகிறார்.

டான் ரிலீஸ் எப்போ
டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்த படத்தை 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினமான பிப்ரவரி 14 அல்லது சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அயலான் படத்திற்கு தடை
டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து நீண்ட காலமாக தாமதமாகி வரும் அயலான் படம் இந்த ஆண்டு டிசம்பரில் ரிலீசாகும் என கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய கோர்ட் விதித்துள்ளதால் புத்தாண்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைலிங்குவல் படம்
இதைத் தொடர்ந்து சிங்கப்பாதை படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், தெலுங்கு டைரக்டர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் படம் ஒன்றில் நடிக்க போகிறாராம். இந்த படத்தின் ஷுட்டிங் ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளதாம். இதோடு சேர்த்து இரண்டு மெகா பட்ஜெட் படங்களிலும் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேசப்பட்டு வருகிறதாம்.

கமலுடன் கைகோர்க்கிறாரா
ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் தான் பிக்பாஸ் 5 டைரக்டர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட ராஜ்குமார், கமலிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கி உள்ளாராம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனை லீட் ரோலில் நடிக்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்கான அனைத்து நடைமுறைகளும் கிட்டதட்ட முடிந்து விட்டதாம். விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட மணிரத்னமுமா
மற்றொரு ஹாட் நியூசாக, பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி, முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படத்தை புத்தாண்டில் இயக்க போகிறாராம். இதற்காக மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீசுடன் பேசி உள்ளாராம். இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாம். புத்தாண்டில் இந்த படத்தின் வேலைகளும் துவங்கப்பட உள்ளதாம்.