சண்டையா, யார் சொன்னது?: தனுஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்
சென்னை: தனுஷின் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டவர் தனுஷ் என்பது தெரிந்த கதை தான். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
தனுஷை பிரிந்த பிறகு சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்து கோலிவுட்டின் வெற்றி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். இந்நிலையில் இன்று 35வது பிறந்தநாள் கொண்டாடும் தனுஷுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அண்ணா என்று அழைக்காமல் சார் என்று மரியாதையுடன் வாழ்த்தியுள்ளார் சிவா.
சிவகார்த்திகேயனின் ட்வீட்டை பார்த்த தனுஷ் ரசிகரோ ஏத்திவிட்ட ஏணியை மறக்காமல் இருக்குமாறு அறிவுரை வழங்க அது பிரச்சனையாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











