தனது படத்தை பார்த்து டாக்டர் ஆக ஆசைப்படும் சிறுவன்... சிவகார்த்திகேயன் ரியாக்ஷன பாருங்க!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தை பார்த்துவிட்டு டாக்டர் ஆக ஆசைப்பட்ட சிறுவனின் வீடியோவை பார்த்த சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் டாக்டர் படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் 100 கோடி ருபாய்க்கு மேல் வசூலை குவித்தது.

குட்டி ரசிகரின் ஆசை
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் குட்டி ரசிகர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது அம்மாவிடம் பேசும் அந்த சிறுவன் தான் டாக்டர் ஆகப் போவதாக கூறுகிறார். ஏன் டாக்டர் ஆக வேண்டும் என்று அவரது அம்மா கேட்க டாக்டர் படத்தில் சிவ கார்த்திகேயன் டாக்டர் ஆக நடித்துள்ளதால் தானும் டாக்டர் ஆக வேண்டும் என்று கூறுகிறார்.

நிச்சயமா டாக்டர் ஆகிடுவீங்க
இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், தம்பி சூப்பர்ப்பா... நிச்சயமா டாக்டர் ஆகிடுவீங்க... என்னுடைய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை ஷேர் செய்த வெங்கட் என்பவரின் பெயரை குறிப்பிட்டு நல்ல பொழுது போக்கு படங்களை கொடுப்பேன் என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

நீங்க வேற லெவல் அண்ணா..
சிவகார்த்திகேயனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்களும் ரசிகர்களும், அவரை புகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயனின் பதிவை பார்த்த இந்த ரசிகர், அண்ணா மற்ற நடிகர் போல நீங்க இல்ல நீங்க அத விட ஒரு பத்து மடங்கு மேல தான் நீங்க வேற லெவல் அண்ணா என பதிவிட்டுள்ளார்.

எல்லோருக்கும் இன்ஸ்பைரேஷன்தான்..
மற்றொரு ரசிகரான இவர் சிவகார்த்திகேயன் அண்ணா எப்போதுமே வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் எங்கள் அண்ணா இன்ஸ்பிரேஷன் தான், லவ் யூ அண்ணா என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

குழந்தைகளை கவரும் தன்மை
ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன்,
குழந்தைகளை எளிதில் கவரும் தன்மை இந்த இருவருக்கும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











