நெப்போலியன் மகன் திருமணம்.. ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.. தனுஷ் பயங்கர மகிழ்ச்சி

சென்னை: நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் ஜப்பானில் இன்று நடைபெற்றது. அதில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் ரசிகர்களும் தங்களது வாழ்த்தினை அவர்களுக்கு கூறினார்கள். இந்தச் சூழலில் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது வாழ்த்தினை தனுஷுக்கும், அக்‌ஷயாவுக்கும் தெரிவித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷுக்காக குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். அதனையடுத்து தனுஷுக்கு திருமண ஏற்பாடுகளை செய்த அவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை பார்த்திருக்கிறார். அவர்களது நிச்சயதார்த்தம் தமிழ்நாட்டில் நடந்தது. தனுஷால் விமானத்தில் பயணித்து இந்தியாவுக்கு வரமுடியாத சூழலால் அவர் வீடியோ காலில் தனது நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்டார். பிறகு திருமணத்தை ஜப்பானில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

napolean dhanush sivakarthikeyan

ஜப்பானில் திருமணம்: அதன்படி கப்பலில் ஒருவார காலம் அமெரிக்காவிலிருந்து பயணத்தை ஆரம்பித்து ஜப்பான் சென்றடைந்தது நெப்போலியன் குடும்பம். அங்கு திருமணத்துக்கான வேலைகளை மும்முரமாக செய்தார்கள். இதற்கிடையே தனது திருமணத்தை விமர்சித்த சிலருக்கு தனுஷ் தரமான பதிலடி கொடுத்து அனைவரையும் வாயடைக்க வைத்தார். நெப்போலியனும் உருக்கமாக சில விஷயங்களை பேசியிருந்தார்.

படையெடுத்த பிரபலங்கள்: நெப்போலியனின் மகன் திருமணத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த யார் யார் பங்கேற்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. அதன்படி குஷ்பூ, ராதிகா, மீனா, கலா மாஸ்டர், பாண்டியராஜன், சரத்குமார் என பெரும் நட்சத்திர பட்டாளமே ஜப்பானுக்கு சென்றனர். வந்தவர்களை நெப்போலியன் சிறப்பாக வரவேற்று அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.

இன்று திருமணம்: சூழல் இப்படி இருக்க இன்று காலை ஜப்பானில் தனுஷ் - அக்‌ஷயா திருமணம் நடந்து முடிந்தது. அவர்களின் திருமணம் முடிந்ததை அடுத்து நெப்போலியன் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார். மேலும் வந்திருந்த பிரபலங்களும், மற்றவர்களும் அவர்களுக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்த சூழலில்; சிவகார்த்திகேயன் வீடியோ மூலம் அவர்களுக்கான வாழ்த்தை கூறினார். அது நெப்போலியன் மகனுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸாக இருந்தது அவரது ரியாக்‌ஷனில் தெரிந்தது.

சிவகார்த்திகேயன் என்ன பேசினார்: எஸ்கே அந்த வீடியோவில் பேசுகையில், "தனுஷுக்கும் அக்‌ஷயாவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். இன்றைக்கு நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ அதைவிட சந்தோஷமாக இனி இருக்க வேண்டும். தனுஷ் தம்பி உங்களுக்கு என்னை ரொம்பவே பிடிக்கும். அதேபோல் எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களுக்கு நடந்த இந்த நிகழ்வு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நெப்போலியன் சார் எனக்கு ரொம்ப நீங்கள் ஸ்பெஷல். எனக்கு கஷ்டமான காலத்தில் எல்லாம் நீங்கள் எனக்கு துணையாக இருந்திருக்கிறீர்கள்.

நான் அந்தத் திருமணத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கு சில வேலைகள் இருந்ததால்என்னால் வரமுடியவில்லை. அதற்கு மன்னிப்பு. சீக்கிரமே வந்து அனைவரையும் சந்திக்கிறேன். உங்களது மனம் போலவே தனுஷ் தம்பி நலமாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்" என்றார். முன்னதாக தனுஷுக்கு பிடித்த ஹீரோ சிவகார்த்திகேயன் என்பதுகுறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X