அட சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் பெயர் இதுவா?.. வேற மாதிரி இருக்கே

சென்னை: சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த அமரன் திரைப்படம் மெகா ஹிட்டாகி உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்கிறார். இன்று அவர் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில் அவரும் ஏ.ஆர்.முருகதாஸும் இணையும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தற்போது எக்கச்சக்கமாக இருக்கிறது. டாக்டர், டான் என வரிசையாக இரண்டு படங்களில் நூறு கோடிகளை வசூல் செய்தார். அதனையடுத்து நடித்த பிரின்ஸ் திரைப்படம் தோல்வியடைந்தது. அந்த சறுக்கலை வைத்து சிவா இனி அவ்வளவுதான் என்று பலரும் கூறினார்கள். ஆனால் அந்தப் பேச்சை மாவீரன் படத்திலேயே அடித்து நொறுக்கிவிட்டார். மடோன் அஸ்வின் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து நடித்த அயலான் திரைப்படமும் கேப்டன் மில்லர் படத்தை சம்பவம் செய்து வென்றது.

SivaKarthikeyan A R Murugadoss Madharasi

அமரன் மெகா ஹிட்: சிவகார்த்திகேயனின் கரியரிலேயே அமரன் திரைப்படத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படத்தில் எஸ்கேவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து அந்தப் படம் தயாரானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது ஏகோபித்த ஆதரவை கொடுத்தார்கள். விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது.

300 கோடி க்ளப்: அதாவது அந்தப் படம் உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதுதான் சிவாவின் கரியரிலேயே உச்சபட்ச வசூல் செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிவாவின் நடிப்பும் அவ்வளவு மெருகேறியிருந்தது. இப்படி பல விதங்களில் இந்தப் படம் சூப்பர் அப்ளாஸை அள்ளியதன் காரணமாக சிவாவின் மார்க்கெட்டும் சரசரவென்று உயர்ந்தது.

அடுத்த படங்கள்: அமரன் படத்தை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார் சிவா. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். முருகதாஸ் கடந்த சில வருடங்களாக ஹிட் எதுவும் கொடுக்காததால் சிவகார்த்திகேயனை வைத்து கண்டிப்பாக ஒரு ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் உழைத்துவருகிறார். இதில் ஹீரோயினாக ருக்மிணி நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதராஸி: படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துவரும் நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்துக்கு மதராஸி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. டைட்டில் க்ளிம்ப்ஸை பார்க்கையில் இந்தப் படம் பக்கா ஆக்‌ஷன் படமாக உருவாகியிருப்பது உறுதியாகியிருக்கிறது. தற்போது அது பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது. படமானது பான் இந்தியா அளவில் ரிலீஸாகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X