Independence Day 2024: ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட்.. சிவகார்த்திகேயனின் அமரன் ஆக்‌ஷன் வீடியோ!

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகிறது. முன்னதாக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அமரன் படத்தின் ஆக்சன் மேக்கிங் வீடியோ ஒன்றை தற்போது ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் அடிக்கும் விதமாக இந்த வீடியோ சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

Independence day 2024 independence day amaran 2024

வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாறு படமாகவே இந்த அமரன் படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்காக சிவகார்த்திகேயன் எந்த அளவுக்கு மெனக்கெட்டு உடல் உழைப்பை போட்டுள்ளார் என்பதை காட்டும் விதமாகவும் இந்த வீடியோ அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயனின் அமரன்: கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆனாலும், அந்த படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், அடுத்ததாக தீபாவளிக்கு அமரன் படத்தை வெளியிடவுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கு இடையில், அவரது தயாரிப்பில் குரங்கு பெடல் மற்றும் கொட்டுக்காளி படங்கள் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் இயக்குநர்: கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து 5 சீசன்கள் வரை இயக்கியிருந்தார். இந்நிலையில், மீண்டும் அவர் இயக்க ஆரம்பிக்க கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் இப்படியொரு ராணுவ வீரரின் பயோபிக்கை படமாக்கியுள்ளார்.

அமரன் ஆக்ஷன் மேக்கிங்: ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக அமரன் படத்தின் ஆக்ஷன் மேக்கிங் வீடியோவை தற்போது ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக தீவிரவாதிகளை எதிர்த்து சண்டை போடுவதும், காஷ்மீர் மக்கள் தீவிரவாதிகளால் படும் துன்பங்களையும் துயரங்களையும் காட்டியுள்ளனர். குண்டுவெடிப்பு காட்சிகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டு நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

தாடி லுக்கில் சிவகார்த்திகேயன்: அமரன் படத்தைத் தொடர்ந்து அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். நேற்று நடைபெற்ற கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு தாடி லுக்கில் சிவகார்த்திகேயன் வந்ததை பார்த்த ரசிகர்கள் ஏ.ஆர். முருகதாஸ் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X