யப்பா எவ்வளவு மரியாதை.. அமரன் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் கமலுக்கு என்ன செஞ்சாரு தெரியுமா?

சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட அந்தப் படம் வெற்றிகரமாக 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது. தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் 100 நாட்கள் ஓடியது என்றால் அது அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அமரன் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

கோலிவுட்டில் கடந்த சில வருடங்களாகவே உற்று கவனிக்கப்படுபவராக சிவகார்த்திகேயன் மாறியிருக்கிறார். டாக்டர் படம் 100 கோடி க்ளப்பில் இணைந்தது. அப்போது பலரும் லக்கில்தான் அந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூலித்ததாக கூறினார்கள். ஆனால் அடுத்து வெளியான டான் படமும் அந்த க்ளப்பில் சேர்ந்தது. அதனையடுத்து சிவகார்த்திகேயனுக்கு லக் என்று சொன்னவர்கள் எல்லாம் கப் சிப் என்றாகிவிட்டார்கள். ஆனால் அடுத்ததாக நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து மீண்டும் சிவாவை வசைபாடினார்கள்.

Sivakarthikeyan Amaran Kamal Haasan Amaran Success Meet SK Amaran Movie Parasakthi

ஃபார்முக்கு வந்த சிவகார்த்திகேயன்: ப்ரின்ஸ் படத்துக்கு பிறகு அவர் நடித்த மாவீரன், அயலான் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதிலும் அயலான் திரைப்படம் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக களமிறங்கி பந்தயம் அடித்தது. அதனையடுத்து தன்னை வளர்த்துவிட்டவரையே கோதாவில் சிவா சாய்த்துவிட்டாரே என்று ஓபனாகவே பேசினார்கள். மாவீரன், அயலான் ஆகிய இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை வசூலித்தன. இப்படி வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார் அவர்.

அமரன் மெகா ஹிட்: அந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு வெளியானது அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். கமல் ஹாசன் தயாரித்திருந்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய் வசூலை பெற்றது. இதனால் கோலிவுட்டின் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக மாறியிருக்கிறார் எஸ்கே. சம்பளத்தையும் 50 கோடி ரூபாய்வரை ஏற்றிவிட்டார் என்றும் பேச்சுக்கள் ஓடுகின்றன.

அமரன் வெற்றி விழா: அமரன் திரைப்படம் வெற்றிகரமாக 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியது. கோலிவுட்டில் ஒரு தமிழ் படம் நீண்ட காலத்துக்கு பிறகு 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடுகிறது என்றால் அது அமரன் திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக படக்குழுவினரும், சிவகார்த்திகேயனின் ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அமரன் படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சிவகார்த்திகேயன் செய்த செயல்: வெற்றி விழாவில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அப்போது மேடைக்கு கமல் அழைக்கப்பட்டார். மேடைக்கு வந்தவர் ஓரமாக நின்றார். அதனை கவனித்த சிவகார்த்திகேயனோ உடனடியாக கமலை அழைத்து தனக்கும், ராஜ்குமார் பெரியசாமிக்கும் நடுவே நிற்கும்படி பணிவோடு கூறினார். தொடர்ந்து கமலும் அவ்வாறு நின்றார்.அதனைப் பார்த்த ரசிகர்கள் சிவாவுக்கு கமல் மீது எவ்வளவு மரியாதை என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X