Housemates Box Office: சிவகார்த்திகேயன் ரிலீஸ் பண்ணாரே ஹவுஸ்மேட்ஸ்.. முதல் நாள் வசூல் இவ்ளோதானா?
சென்னை: இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா பைஜு, வினோதினி மற்றும் தீனா நடிப்பில் ஆகஸ்ட் 1ம் தேதியான நேற்று வெளியான ஹவுஸ்மேட்ஸ் திரைப்படத்துக்கு சினிமா பிரபலங்களும் பத்திரிகையாளர்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்த நிலையிலும், முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் ஓபனிங் பெரிதாக வசூல் செய்யவில்லை.
சிவகார்த்திகேயன் தனது எஸ்கே ப்ரோடக்ஷன்ஸ் பேனரில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தார். கனா, துணிவு படங்களில் நடித்த நடிகர் தர்ஷன் நடிப்பில் வெளியான ஹாரர் சைஃபை திரைப்படமாக இந்த படம் வெளியாகி இருந்தது.

ஆகஸ்ட் 1ம் தேதி தமிழில் பல படங்கள் வெளியாகின. டிஜே அருணாச்சலம், பிக் பாஸ் ஜனனி இணைந்து நடித்த உசுரே, சரண்டர், அக்யூஸ்ட் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. ஆனால், அந்த படங்களை விட சற்றே அதிகமாக ப்ரோமோஷன் செய்யப்பட்ட ஹவுஸ்மேட்ஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூலே பெரிதாக இல்லை என்பது சினிமா வட்டாரத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹவுஸ்மேட்ஸ் கதை என்ன?: கார்த்திக் மற்றும் அனு புதிதாக திருமணம் செய்துக் கொண்டு செகண்ட் ஹேண்ட் அபார்ட்மெண்ட்டுக்கு குடியேறுகின்றனர். ஆனால், அந்த வீட்டில் தீடிரென நடக்கும் அமானுஷ்ய விஷயங்களால் பேய் இருப்பதாக பயப்படுகின்றனர். இதே பிரச்சனையை காளி வெங்கட் மற்றும் வினோதினி தம்பதியினரும் எதிர்கொள்கின்றனர். இந்த இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் ஆவியா? அறிவியலா? என்கிற முடிச்சியில் படம் நிறைவடைகிறது.
ஹவுஸ்மேட்ஸ் பட்ஜெட்: தர்ஷன், காளி வெங்கட் நடித்துள்ள இந்த ஹாரர் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தின் பட்ஜெட் 4 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை வாங்கி வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெறும் என பலரும் வாழ்த்திய நிலையில், முதல் நாள் வசூல் பெரிதாக இல்லை என்பது படக்குழுவை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
ஹவுஸ்மேட்ஸ் முதல் நாள் வசூல்: தர்ஷன், அர்ஷா பைஜு நடிப்பில் வெளியான ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் முதல் நாளில் 23 லட்சம் முதல் 30 லட்சம் வரை வசூல் வந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











