ரஜினிகாந்த், விஜய், அஜித் ரேஞ்சுக்கு இன்னும் சிவகார்த்திகேயன் வரலையா?.. டல்லடிக்கும் மதராஸி புக்கிங்!
சென்னை: ரஜினிகாந்த், அஜித், விஜய் படங்களுக்கு எல்லாம் டிக்கெட் ஓபன் ஆனாலே புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளங்கள் கிராஷ் ஆகிவிடும். ஆஃப் லைனில் ரசிகர்கள் அடித்து பிடித்துக் கொண்டு டிக்கெட் வாங்க முயல்வார்கள். ஆனால், மத்ராஸி டிக்கெட் புக்கிங் அப்படியெல்லாம் நடக்காமல் ரொம்பவே டல்லடிப்பதை பார்த்த நெட்டிசன்கள் சிவகார்த்திகேயன் இன்னும் வளரணும் என கமெண்ட் அடிக்க ஆரம்பித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக அவரை மாற்றிய நிலையிலும் மதராஸி படத்துக்கான ஓபனிங் பெரியளவில் இருக்குமா? அல்லது மற்ற டயர் 2 நடிகர்கள் போல படம் வெளியாகி ஹிட் அடித்தால் மட்டுமே டிக்கெட் புக்கிங் சூடு பிடிக்குமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

அமரன் படமே நல்லா இருக்கு என ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்த பின்னர் தான் பிக்கப் ஆகி பெரிய வசூல் வேட்டையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கூலி பாதிப்பா?: தக் லைஃப் படத்தின் பாதிப்பு அடுத்து வெளியான சில பெரிய படங்களின் வசூலை ரொம்பவே பாதித்தது. அதே போல கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தின் பாதிப்பு மதராஸி படத்திலும் எதிரொலிக்குமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. எந்த ஹைப்பும் ஆகாமல் படம் வெளியாகி நல்ல மவுத் டாக் வந்த பிறகு பொறுமையாக டிக்கெட் புக் செய்துவிட்டு பார்க்கலாம் என்றூ ரசிகர்கள் முடிவு செய்தார்களா? என்கிற கேள்விகளும் எழுகின்றன.
முருகதாஸ் மீதான நம்பிக்கை: சிவகார்த்திகேயன் படத்தை தாண்டி இது முருகதாஸ் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இயல்பாகவே ரசிகர்கள் மத்தியில் குறைந்து தான் காணப்படுகிறது என்றும் அனிருத்தும் இந்த படத்துக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுக்கவில்லை என்கிற பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சல்மான் கானை வைத்து சிக்கந்தர் படத்தை இந்த ஆண்டு கொடுத்து ரசிகர்களை ஏ.ஆர். முருகதாஸ் அப்செட் ஆக்கியது தான் பிரச்சனை என்றும் கூறுகின்றனர்.

மற்ற நடிகர்களை காட்டிலும் பரவாயில்லை: விஜய், அஜித் மற்றும் ரஜினிகாந்த் அளவுக்கு டிக்கெட் புக்கிங் ஓபனிங் ஆனவுடனே முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடவில்லை என்றாலும், மற்ற நடிகர்களை கம்பேர் செய்யும் விதத்தில் பல இடங்களில் முதல் ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் ஆரஞ்சு நிறத்தில் வந்துவிட்டது. கூடிய சீக்கிரமே FDFS ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும் என்கின்றனர். செப்டம்பர் 5 வரை டைம் இருப்பதால் நாளை அல்லது நாளை மறுநாள் டிக்கெட் புக்கிங் சூடு பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பராசக்திக்கு ஹைப் இருக்கு: மதராஸி படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுவிட்டால், பராசக்தி படம் வெளியாகும் போதெல்லாம் இந்த நிலை இருக்காது என்றும் ஏற்கனவே சுதா கொங்கரா படம், ரவி மோகன் வில்லன், ஸ்ரீலீலா தமிழில் அறிமுகம், அதர்வாவும் இருக்கார் என படத்தின் மீதும் இந்தி திணிப்புக்கு எதிரான கதை என திரைக்கதை மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அதை மதராஸி கெடுக்காமல் இருந்தாலே நலம் என்றே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கருதுகின்றனர். சிவகார்த்திகேயன் சொன்னது போலவே ரசிகர்களை சம்பாதிப்பது எல்லாம் அவ்வளவு எளிதான காரியமல்ல!


Click it and Unblock the Notifications











