ஃபுல் ஆக்ஷன் அவதாரமா?.. மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து என்ன செய்திருக்கிறார் முருகதாஸ்?
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார் முருகதாஸ். எனவே இந்தப் படத்தை ஹிட் கொடுத்து மார்க்கெட்டில் தன்னை தக்கவைத்துக்கொள்ள மும்முரமாக உழைத்திருக்கிறாராம் அவர். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். அவர் இயக்கிய தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என வரிசையாக ஹிட் படங்களாக அமைந்தன. தமிழில் கஜினியை எடுத்து பெரிய வெற்றி பெற்று ஹிந்திக்கு சென்று அங்கே அப்படத்தை ரீமேக் செய்து பாலிவுட்டிலும் வெற்றியை பெற்றார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர்கள் ஆசைப்பட்ட காலம் எல்லாம் உண்டு.
சறுக்கிய முருகதாஸ்: ஆனால் கடந்த சில வருடங்களாகவே முருகதாஸுக்கு போதாத காலம். கடைசியாக அவர் இயக்கிய சிக்கந்தர், தர்பார், ஸ்பைடர், சர்கார் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது மட்டுமின்றி; கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. எனவே எப்படியாவது ஒரு வெற்றி கொடுக்க வேண்டும் என்ற வேட்கை அவருக்கு பிறந்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமையில்தான் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைத்தார்.

மதராஸி சிவகார்த்திகேயன்: இரண்டு பேரும் இணைந்திருக்கும் படத்துக்கு மதராஸி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ருக்மிணி வசந்த் ஹீரோயினாக நடிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிளான சலம்பலா சூப்பர் வரவேற்பை பெற்றது. பாடல் போலவே படமும் ஹிட்டாக வேண்டும் என்று எஸ்கே ரசிகர்களும் ஆசை வைத்திருக்கிறார்கள். அடுத்த மாதம் ஐந்தாம் தேதி படம் ரிலீஸாகிறது.
இதுதான் கதையா?: சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட முருகதாஸிடம் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் கஜினி மாதிரியான ஒரு காதல் கதையும், துப்பாக்கி மாதிரியான் ஆக்ஷன் கதையும் சேர்ந்ததுதான் மதராஸி என கூறினார். எனவே இப்படம் காதல் ப்ளஸ் ஆக்ஷன் படமாக உருவாகியிருப்பது உறுதியாகியிருக்கிறது. அவர் என்னதான் கஜினி, துப்பாக்கிபோல் என கூறினாலும்; அதே அளவுக்கு எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. இருப்பினும் முருகதாஸ் அதை செய்துகாட்டுவார் என்றும் நம்பலாம்.
ஃபுல் ஆக்ஷன் அவதாரம்: சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் அமரன் படத்துக்கு பிறகு எங்கேயோ போய்விட்டது. அவருக்காக கதைகளில் சில காம்ப்ரமைஸ் செய்யும் நிலைமையும், மாஸ் காட்சிகளை சேர்க்கும் நிலைமையும் இயக்குநர்களுக்கு வந்திருக்கிறது என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட நிலைமைதான் முருகதாஸுக்கு மதராஸி படத்தில் ஏற்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மேக்கிங் வீடியோவில் முழுக்க முழுக்க எஸ்கே ஆக்ஷன் அவதாரத்தை எடுத்திருக்கும் காட்சிகள்தான் இருக்கின்றன.
அதை பார்த்த ரசிகர்களோ அமரன் வெற்றிக்கு பின்னதாக எஸ்கே முழு ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் என்பதைத்தான் இந்த மேக்கிங் வீடியோ உணர்த்துகிறது. கண்டிப்பாக படம் முழுக்க ஆக்ஷன் அவதாரத்தைத்தான் சிவா எடுத்திருப்பார் போல; அப்படி இருக்கும்பட்சத்தில் அது ஓவர்டோஸாக மாறிவிட்டால் என்ன செய்வது மற்றும் சிவாவை வைத்து முருகதாஸ் என்ன செய்திருக்கிறாரோ என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications