சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.. பராசக்தி ஹீரோவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?.. வேற லெவல் கெத்து

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் உலகளவில் 350 கோடி ரூபாய் அளவில் வசூலித்தது. அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். சிவாவும், ஏ.ஆர்.முருகதாஸும் இணையும் படத்தின் பெயர் இன்று வெளியாகிறது. சூழல் இப்படி இருக்க எஸ்கே இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு தனியார் சேனலில் தொகுப்பாளராக வென்றவர் சிவகார்த்திகேயன். அப்போது அவரை கவனித்த தனுஷ் தனது முன்னாள் மனைவி இயக்கி தான் ஹீரோவாக நடித்த 3 படத்தில் ஒரு ரோல் கொடுத்தார். அதில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அவர். இதற்கிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் மெரீனா, எழில் இயக்கத்தில் மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் சிவகார்த்திகேயன். அந்தப் படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன.

Sivakarthikeyan Amaran Parasakthi

ரஜினி முருகன்: தொடர்ந்து ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த அவருக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படம் மெகா ஹிட்டானதை அடுத்து ரஜினிமுருகன் படத்தில் நடித்தார். அந்தப் படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக குறுகிய காலத்துக்குள்ளாகவே டாப் 10 ஹீரோக்களுக்குள் வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். அதேபோல் நடனம், நடிப்பு என அத்தனை ஏரியாக்களிலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார் அவர்.

100 கோடி க்ளப்: சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் திரைப்படம் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட டாக்டர் நூறு கோடி க்ளப்பில் இணைந்தது. அடுத்ததாக அவர் நடித்த டான் திரைப்படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்தது. தொடர்ந்து நடித்த பிரின்ஸ் திரைப்படம் தோல்வியடைந்தாலும் அடுத்ததாக வெளியான மாவீரன், அயலான் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

அமரன் மெகா ஹிட்: மாவீரன், அயலான், டான், டாக்டர் ஆகிய படங்களைவிடவும் சிவகார்த்திகேயனை உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் கடந்த வருடம் வெளியாகி உலகளவில் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை 50 கோடி ரூபாய்வரை உயர்த்தியிருப்பதாக திரைத்துறையில் பேச்சுக்கள் சமீபமாக எழுந்திருக்கின்றன.

பராசக்தி ஹீரோ: அமரன் படத்தை முடித்த அவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் மீது அவரும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தின் டைட்டில் இன்று வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவர் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

சொத்து மதிப்பு: பிறந்தநாள் கொண்டாடும் சிவாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அமரன் வெற்றிக்கு பிறகு ஒரு படத்துக்கு 50 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்கும் அவருக்கு சென்னை மற்றும் அவரது சொந்த ஊரான திருச்சியில் சொகுசு பங்களா இருக்கிறதாம்.

அதேபோல் அவரிடம் Audi Q7, மினி கூப்பர் போன்ற சொகுசு கார்களை வைத்திருக்கும் அவர்; தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வேறு தொழில்களிலும் இன்வெஸ்ட் செய்துவருகிறாராம். ஆகமொத்தம் அவரிடம் 160 கோடி ரூபாய்வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியராகவும் ஜொலித்துவருகிறார் அவர். கோலமாவு கோகிலா, பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கும் அவர்; அதில் வந்த வருமானத்தை மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் குடும்பத்துக்கு கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X