நான் எப்போதும் இப்படித்தான்.. ஆசையெல்லாம் எதுவுமே இல்லை - ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.அக்டோபர் 31ஆம் தேதி அவரது நடிப்பில் அமரன் படம் வெளியாகவிருக்கிறது. கடைசியாக GOAT படத்தில் கேமியோ ரோல் செய்திருந்தார். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.மேலும் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுத்து விஜய் பேசும் வசனமும், அதற்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ரிப்ளையும் செம ரெஸ்பான்ஸை தியேட்டர்களில் பெற்றது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்தோடு போட்டியாக களமிறங்கி பந்தயம் அடித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் அபாரமாக வளர்ச்சி அடைந்துவிட்டார் என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இதற்கிடையே அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கமல் ஹாசன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

sivakarthikeyan vijay goat

அமரன் ரிலீஸ்: படமானது அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்திய ராணுவத்தின் முன்னாள் வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. நிச்சயமாக இந்தப் படம் சிவாவின் கரியரில் அடுத்தக்கட்ட பாய்ச்சலாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

முருகதாஸுடன் கூட்டணி: மேலும் ஏ.ஆர்.முருகதாஸுடனும் கூட்டணி அமைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் முடியும் தருவாயில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் தவிர்த்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் சிவா நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு ஆவல் இருக்கிறது.

GOAT கேமியோ: வெங்கட் பிரபுவுடன் இருக்கும் நட்பின் காரணமாக GOAT படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் கேமியோ ரோல் செய்திருந்தார் சிவா. அதில் அவரிடம் துப்பாக்கியை பிடிங்க சிவா. க்ரவுண்ட்ல இருக்குற உயிர்கள் உங்களோட பொறுப்பு என்று விஜய் சொல்வதும்; அதற்கு, நீங்க ஏதோ முக்கியமான வேலையா போறீங்க; அதை நீங்க பார்த்துக்கோங்க; இதை நான் பார்த்துக்குறேன் என்று சிவா சொல்வதுமாக வசனங்கள் வந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவை சிவகார்த்திகேயனிடம் விஜய் ஒப்படைத்துவிட்டார் என்று கூறுகிறார்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவரிடம் நீங்கள் அடுத்த சூப்ப ர்ஸ்டாரா இல்லை உலக நாயகனா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் எப்போதுமே சிவகார்த்திகேயன் தான். அவர்கள் எல்லாம் வேறு லெவலில் இருக்கிறார்கள். அந்த இடத்துக்கு நான் எப்போதுமே ஆசைப்பட்டது இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X