சிக்கப்போவது யாரு?.. செதறபோவது யாரு?.. ஜன நாயகன் படத்துடன் நேரடியாக மோதும் பராசக்தி?
சென்னை: அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ம் தேதி ஷார்ப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக முன்கூட்டியே பராசக்தி படம் வெளியாகப் போவதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த மாத இறுதியில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதை விட பிரம்மாண்டமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் பங்கேற்க சென்னையிலேயே பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவை பண்ண பக்கா பிளான் ஓடிக்கொண்டிருப்பதாக சமீபத்தில், பேச்சுக்கள் அடிபட்டன.

இந்நிலையில், ஜன நாயகன் ரிலீஸ் ஆகும் அதே தேதியிலேயே சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை ரிலீஸ் செய்ய ரெட் ஜெயன்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.
நேரடி மோதல்: துப்பாக்கி கொடுத்தவரிடமே அதை சோதித்துப் பார்க்க போகிறார் சிவகார்த்திகேயன் என பலரும் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். ஏற்கனவே பொங்கல் போட்டியில் ஜன நாயகன் பங்கேற்றுள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸில் ஜன நாயகன் vs பராசக்தி தான் தமிழ்நாட்டு அளவில் உள்ளது. பிரபாஸின் ராஜா சாப் திரைப்படமும் தள்ளிப்போனால், ஜன நாயகன் vs பராசக்தி மோதல் உறுதியாகி விடும்.

விஜய்க்கு செக்: தளபதி விஜய்யின் கடைசி படமாக ஜன நாயகன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ளது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான பகவந்த் கேசரி படத்தின் அப்பட்டமான ரீமேக் என்றும் அதிலிருந்து கதையை வாங்கிக் கொண்டு புதிதாக அரசியல் காட்சிகளை விஜய் சேர்த்து படம் உருவாகி இருப்பதாகவும் சில பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தி எதிர்ப்பை மையப்படுத்திய கதையாக பராசக்தி வெளியானால் விஜய்க்கு பயங்கர செக் வைக்கப்படும் எனக் கூறுகின்றனர்.
சிவகார்த்திகேயனுக்குத்தான் சிக்கல்: ஒருவேளை ஜனவரி 14ம் தேதி பராசக்தி திட்டமிட்டதை போல வெளியாகாமல், முன்கூட்டியே ஜனவரி 9 அல்லது ஜனவரி 10ம் தேதி வெளியானால், சிவகார்த்திகேயனுக்குத்தான் சிக்கல் என்றும் விஜய் ரசிகர்களின் பவர் அப்போது தான் தெரியும் என தளபதி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பாக்ஸ் ஆபீஸில் பெரிய ரகளை நடக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











