மதராஸி வாங்கிய தர்ம அடி.. பொங்கல் போட்டியில் இருந்து பின் வாங்கும் பராசக்தி.. ஜன நாயகன் ஜாதகம் அப்படி!
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படத்துக்கு முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், டிக்கெட் புக்கிங் டல் அடித்தது. படம் வெளியான பிறகு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும், முருகதாஸ் கம்பேக் என பாராட்டினாலும், படத்தில் உள்ள லாஜிக் ஓட்டைகளும் குறைகளாக கிளம்பின.
மதராஸி திரைப்படம் எதிர்பார்த்த வசூலை முதல் வார பாக்ஸ் ஆபீஸில் பெற முடியாமல் போராடி வரும் நிலையில், பொங்கல் போட்டியில் சிவகார்த்திகேயன் படத்தை இறக்கி விடுவது உகந்த விஷயம் அல்ல என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், பராசக்தி படத்தின் படப்பிடிப்பும் இன்னமும் மொத்தமாக முடியாமல் உள்ள நிலையில், அவசரப்பட வேண்டாமே என்றும் சோலோ ரிலீஸ் செய்தால் கண்டிப்பாக படம் நல்ல வரவேற்பை பெறும் என்கிற முடிவுடன் பொங்கலுக்கு ஜன நாயகன் உடன் மோதும் போட்டியை தவிர்த்து விட்டதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
குறைந்து போன மவுத் டாக்: இந்த ஆண்டு வெளியான படங்களில் டிராகன், குடும்பஸ்தன், மாமன், டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி உள்ளிட்ட படங்களுக்கு நல்ல மவுத் டாக் இருந்தது. விமர்சனங்களை தாண்டி பொதுமக்கள் இந்த படத்தை பார்த்து விடுங்க என பேச ஆரம்பித்தது தான் ஏகப்பட்ட மக்களை தியேட்டர்களை நோக்கி வர வழைத்தது. அமரன் படத்தை போல சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துக்கு பெரியளவிலான மவுத் டாக் மக்கள் மத்தியில் எழாதது தான் வசூல் முதல் 4 நாட்களிலேயே சுமாராக வர காரணம் என்று பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜன நாயகன் உடன் மோதல் இல்லை: அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜன நாயகன் படத்துடன் பராசக்தி மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொங்கலுக்கு ஜன நாயகன் படத்துடன் மோத பிரபாஸின் ராஜாசாப் படம் வேறு வெளியாக உள்ள நிலையில், பராசக்தி படத்தை வெளியிட்டால் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் வசூல் மிகப்பெரியளவில் அடிவாங்கும் என்பதை உணர்ந்த தயாரிப்பாளர்கள் பொங்கல் ரேஸ் வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சர்தார் 2, கருப்பு வருமா?: மேலும், பொங்கல் பண்டிகைக்கு சூர்யாவின் கருப்பு மற்றும் கார்த்தியின் சர்தார் 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கார்த்தியின் வா வாத்தியார் படம் டிசம்பருக்கு வெளியாகவுள்ள நிலையில், அதன் ரிசல்ட்டை பொறுத்து தான் சர்தார் 2 வெளியீட்டுத் தேதி முடிவாகும் என்றும் கூறுகின்றனர். ஜனவரி 26 சர்தார் 2 வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கு என்றும் சூர்யாவின் கருப்பு படம் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப்போகும் என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











