சிவகார்த்திகேயனின் மகனுக்கு என்ன பெயர் தெரியுமா?.. சிம்பிளாக நடந்த பெயர் சூட்டு விழா

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு ஒரு மகள், மகன் இருக்கும் சூழலில் சமீபத்தில் ஒரு மகன் பிறந்தார். இப்போது குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதுதொடர்பான வீடியோவை சிவகார்த்திகேயன் பகிர்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் இப்போது டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாயை வசூலித்து மெர்சல் செய்தது. 2K கிட்ஸ் தலைமுறையினர் அவரை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். அதன் காரணமாக 90ஸ் கிட்ஸுக்கு எப்படி விஜய் ஒரு கொண்டாட்டத்துக்குரிய ஹீரோக்களில் ஒருவராக இருந்தாரோ அதேபோல் 2K கிட்ஸுக்கு சிவகார்த்திகேயன் திகழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் திரைத்துறையில் பெரும்பாலானவர்களின் பேச்சு.

Sivakarthikeyan

அமரன்: கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அயலான் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதற்கு முன்னதாக வெளியான மாவீரனும் ஹிட்டடித்தது. இப்படி வரிசையாக இரண்டு ஹிட்டுகளை கொடுத்த கையோடு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கமல் ஹாசன் தயாரிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் சிவாவுக்கு ஹாட்ரிக் வெற்றியை பரிசளிக்கும். ஏனெனில் ரங்கூன் படத்தின் மூலமே ராஜ்குமார் பெரியசாமி தான் ஒரு நல்ல இயக்குநர் என்பதை நிரூபித்துவிட்டார்.

எஸ்கே 23: இதற்கிடையே சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரான முருகதாஸுக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரியில்லை. அவர் எடுத்த படங்கள் அத்தனையும் அட்டர் ப்ளாப் ஆகின. அவரது நிலைமையை பார்த்த ரசிகர்கள், அட நம்ம முருகதாஸுக்கா இந்த நிலைமை என பரிதாபத்தில் உச் கொட்டுகிறார்கள். எனவே இப்படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுக்க முருகதாஸ் காத்திருக்கிறார்.

குடும்பம்: இதற்கிடையே சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் வேலை செய்துகொண்டிருந்தபோதே தனது உறவுக்கார பெண்ணான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருக்கிறார்கள். ஆராதனா சினிமாவில் பாடவும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குகன் சில வருடங்களுக்கு முன்புதான் பிறந்தார்.

பவன் சிவகார்த்திகேயன்: இந்நிலையில் கடந்த மாதம் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை ஆண் குழந்தை ஆகும். சிவாவுக்கு மூன்றாவது குழந்தை பிறந்ததை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். சூழல் இப்படி இருக்க அந்தக் குழந்தைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பவன் சிவகார்த்திகேயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெயர் சூட்டு விழா சிவகார்த்திகேயனின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. அதுதொடர்பான வீடியோவை சிவா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X