‘நாய்சேகர்‘ படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்… சுவாரசியத் தகவலை சொன்ன சதீஷ் !
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நாய் சேகர் படத்திற்காக ஒரு பாடலை எழுதியுள்ளார்.
பாடகர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகம் காட்டும் சிவகார்த்திகேயன் தான் நடித்த படங்களில் மட்டும் பாடல்களை எழுதிவந்த நிலையில் தற்போது தனது நண்பன் சதீஷ் நடிக்கும் படித்திற்கும் பாடல் எழுதி உள்ளார்.
இந்த பாடலும் செல்லம்மா செல்லம்மா பாடல் போல ஹிட்டாகுமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ஹீரோவாக
தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகப் பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருபவர் சதீஷ். கதாநாயகனாக நடிக்கும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியது. கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார்.

நாய் சேகர்
மேலும், இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் சதீஷுடன் இணைந்து நடித்துள்ளது. இந்தப் படத்துக்கு 'நாய்சேகர்' எனத் தலைப்பு வைக்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இசையில் துள்ளலான ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். விரைவில் இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாக்டர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற நகைக்சுவை காட்சிகள் தற்போது வரை இணையத்தில் வைரலாகவே உள்ளது. இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.

டான்
சிவகார்த்திகேயன் அடுத்த படம் டான். சிபி சக்ரவர்த்தி என்ற அறிமுக இயக்குனரின் இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும், லைகாவும் இணைந்து தயாரித்துள்ளன. ப்ரியங்கா அருள் மோகன் நாயகி. முக்கியமான வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா. அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











