தனிக்குடுத்தனம் போனால் இப்படித்தான் மானத்தை வாங்குவீங்களா?.. ஜோதிகாவால் சூர்யாவை திட்டிய சிவக்குமார்?

சென்னை: ஜோதிகாவின் நடிப்பில் கடைசியாக டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸ் வெளியானது. அதில் ஜோவின் நடிப்பு ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும் அவர் சிகரெட் பிடிக்கும்படியான காட்சிகள் ஒருதரப்பினரிடம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமா பற்றியும் பேசியது விமர்சனத்தை சந்தித்தது. மேலும் ஜோதிகா கொஞ்சம் வாயை அடக்கி பேச வேண்டும் என்று பலரும் ஓபனாகவே கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சூர்யாவும், ஜோதிகாவும் தீவிரமாக காதலித்துவந்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் இருக்கிறார்கள். குடும்பத்திலும், குழந்தைகள் வளர்ப்பிலும் கவனம் செலுத்திவந்த ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்துக்கு பிறகு நாச்சியார், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே, ராட்சசி என தொடர்ந்து படங்களில் நடித்தார். அதேபோல் நல்ல ரொமான்ட்டிக் கதையம்சம் உள்ள படங்கள் அமைந்தால் தானும், சூர்யாவும் சேர்ந்து நடிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

Sivakumar called Suriya and scolded him because Jyothika smoked a cigarette

பாலிவுட்டில் கவனம்: ஜோதிகா அப்படி சொன்னதும் சில இயக்குநர்கள் அந்த மாதிரியான கதைகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்கள். ஆனால் ஜோ என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு செட்டிலான அவர் தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்துகிறார். சூர்யாவையும் ஹிந்தி படங்களில் கவனத்தை திருப்ப வைத்திருக்கிறார். கடைசியாக அவர் டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

போதை பொருள் கடத்தும் பெண்கள்: அந்த வெப் சீரிஸ் பெண்கள் போதை பொருள் கடத்துவதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அதாவது சாப்பாடு டப்பாவில் அவர்கள் போதை பொருளை கடத்துவதுதான் வெப் சிரீஸின் மையக்கடு. சூழல் இப்படி இருக்க அதில் ஜோவின் நடிப்புக்கு ஓரளவுக்குத்தான் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் அதில் அவர் சிகரெட் பிடிக்கும்படியான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஜோதிகா இப்படி இறங்கிட்டாங்க; சிவக்குமார் இதைப் பார்த்து என்ன சொல்லப்போகிறாரோ என்றும் தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள்.

சபிதா ஜோசப் பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டி ஒன்றில், "சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா ஆத்திகர் இல்லை. கோயில்களுக்கு உதவி செய்வதைவிடவும் அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் உதவிகள் செய்யலாம். அவைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளலாம். செங்கல், சிமெண்ட்டுகளை வாங்கி தரலாம் என கூறினார். ஆனால் ஜோதிகா பேசியதை ஒருதரப்பினரோ வேறு மாதிரியாக திரித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் கோயில்களை பற்றி ஜோதிகா எந்த இடத்திலும் தவறாக பேசவில்லை. இப்போது அவர் மீது அடுத்த சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. அதாவது தமிழர்களுக்கு தமிழ் உணர்வு எப்படி அதிகம் இருக்கிறதோ அதேபோல்தான் ஹிந்திக்காரர்களுக்கும் ஹிந்தி வெறி அதிகமாக இருக்கிறது.

Sivakumar called Suriya and scolded him because Jyothika smoked a cigarette

முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தான் அதை செய்தார்: வடமாநிலங்களில் தென் மாநிலங்களிலிருந்து செல்லும் நடிகர்கள், நடிகைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அங்கேயே தங்க வேண்டும். அதனால்தான் ஜோதிகா மும்பையில் தங்கினார். மும்பையில்தான் ஜோதிகாவின் குடும்பம், சகோதரர் குடும்பம் இருக்கிறது. அதனால் அங்கே செட்டிலாகிவிடலாம் என்று முடிவெடுத்தார். வாடிவாசல் உட்பட படங்களை முடிக்க வேண்டுமென்பதால் சூர்யா அங்கு நிரந்தரமாக தங்குவதில்லை. ஜோதிகா நடித்த டப்பா கார்ட்டெலை பொறுத்தவரை கோலமாவு கோகிலா திரைப்படத்தைத்தான் அங்கு எடுத்திருக்கிறார்கள். அந்த வெப் சீரிஸில் சிகரெட் பிடித்தபடியும் நடித்திருக்கிறார் அவர். இதர வெப் சீரிஸ்கள் இதைவிடம்வும் இன்னும் மோசமாக இருக்கும்.

சிவக்குமாரின் டென்ஷன்: பிரவுன் சுகர் சப்ளை செய்பவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். நேட்டிவிட்டியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜோதிகா அப்படி நடித்திருக்கிறார். இயக்குநர் என்ன சொல்கிறாரோ அப்படித்தான் நடிகரும், நடிகையும் நடிக்க முடியும். ஆனால் ஜோதிகா சிகரெட் பிடித்த காட்சியை பார்த்துவிட்டு சிவக்குமார் டென்ஷன் ஆகிவிட்டார் என்று தெரிகிறது. இதுவரை அவர் கண்ணியத்துடன் தனது படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் அவருடைய இரண்டு மகன்களும் பெண்களுக்கு மரியாதை தரக்கூடிய படங்களில்தான் நடித்திருக்கிறார்கள்.

இப்படித்தான் மானத்தை வாங்குவீர்களா?: ஜோதிகா சிகரெட் பிடித்த காட்சியை பார்த்துவிட்டு சூர்யாவுக்கு ஃபோன் செய்து, 'தனியாக குடுத்தனம் போனால் இப்படித்தான் மானத்தை வாங்குவீர்களா?.. பணத்துக்காக இப்படியும் நடிக்க வேண்டுமா?' என்று சிவக்குமார் திட்டியதாக சிலர் கூறுகிறார்கள். ஏற்கனவே ஜோதிகா - சூர்யாவின் திருமணத்துக்கு சிவக்குமார் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த திருமணம் தொடர்பாக விஜயகாந்த்திடம்கூட, 'எனது மகனை கூப்பிட்டு கணிடியுங்கள். எங்கள் சாதியில்தான் பெண் எடுத்து சூர்யாவுக்கு திருமணம் செய்ய நினைத்தேன். எனவே அவரை கூப்பிட்டு கண்டியுங்கள்' என சிவக்குமார் கூறினார். அதற்கு விஜயகாந்த்தோ, 2 பேரும் காதல் செய்கிறார்கள் பேசாமல் விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டார். ஜோதிகா 36 வயதினிலே படத்தில் நடிக்கும்போதுகூட எந்தவிதமான பிரச்னையும் இல்லை.

Sivakumar called Suriya and scolded him because Jyothika smoked a cigarette

மருமகள் இப்படி நடிக்கிறாராமே?: ஆனால் மும்பையில் ஒரு விழாவில் ஜோதிகா சமீபத்தில் அணிந்துவந்த உடைதான் முதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாயில் சிகரெட்டை வைத்து நடிப்பது சினிமாதான், நடிப்புதான் என்று சிவக்குமாருக்கும்தெரியும். ஆனால் அவருக்கு சிலருக்கு ஃபோன் செய்து உங்கள் மருமகள் இப்படி நடித்திருக்கிறாராமே என்று கேட்பார்கள். அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே என்கிற பயம்தான் சிவக்குமாருக்கு. பாரம்பரியான குடும்பம் அவருடையது. சூர்யாவின் இரண்டு குழந்தைகளும் வளர்ந்துவிட்டார்கள். சூர்யாவும் பெரிய உயரத்துக்கு சென்றுவிட்டார். அப்படியிருக்கும்போது இப்படி நடிக்கலாமா என்றுதான் சிவக்குமார் நினைக்கிறார். இதுபோன்ற காட்சிகளில் விமர்சனங்கள் அதிகமாகவே வரும் என்ற தர்ம சங்கடமும் சிவக்குமாருக்கு இருக்கிறது.

நல்ல மருமகள்: ஜோதிகா மீது சிவக்குமாருக்கு அளவு கடந்த அன்பும், மரியாதையும் இருக்கிறதுதான். நானே தேடியிருந்தாலும் இப்படியொரு மருமகள் எனக்கு கிடைத்திருக்கமாட்டார் என்று சிவக்குமாரே சொல்லியிருக்கிறார். ஜோதிகா எப்போதும் நல்ல மருமகளாகத்தான் நடந்திருக்கிறார். ஆனால் அவர் நடிக்கக்கூடிய இந்த மாதிரியான கேரக்டர்களால்தான் சர்ச்சைகளும், சங்கடங்களும் வந்துவிடுகின்றன. இதுபோன்ற சர்ச்சைகளும், சங்கடங்களும் வராமல் இருக்க வேண்டுமென்றால் நல்ல கேரக்டர்களை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். எனவே ஜோதிகா இனி கவனமாக இருப்பார் என்றே தோன்றுகிறது." என்றார். சபிதா ஜோசப்பின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X