பல ஹீரோயின்களுடன் நான் உருண்டிருக்கேன்.. சூர்யா அப்படி இல்லை.. சிவகுமார் ஓபனா போட்டு உடைச்சிட்டாரே
சென்னை: சூர்யா நடிப்பில் விரைவில் கருப்பு திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு வெங்கி அட்லூரி, ஜித்து மாதவன் ஆகியோரது இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் மீது அவரது ரசிகர்களுக்கு ஆர்வமும், நம்பிக்கையும் அதிகளவு இருக்கிறது. இந்நிலையில் சூர்யா பற்றி அவரது தந்தை சிவகுமார் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
சூர்யா தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். மாநில விருது, தேசிய விருதையெல்லாம் வாங்கியிருக்கும் அவர் கடந்த சில வருடங்களாகவே ஒரு வணிக ரீதியான வெற்றியை கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். ரொம்பவே எதிர்பார்த்து நடித்த ரெட்ரோ, கங்குவா ஆகிய படங்கள் படுதோல்வியையும், கடுமையான ட்ரோலையும் சந்தித்ததில் அவரும் அவரது ரசிகர்கள் உச்சபட்ச அப்செட் ஆகியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
சூர்யாவின் கருப்பு: எனவே அவரது அடுத்தடுத்த படங்களை எதிர்பார்த்திருக்கிறார்கள் ரசிகர்கள். இப்போது அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக தெரிகிறது. அநேகமாக தேர்தலுக்கு முன்னரே படத்தை ரிலீஸ் செய்துவிடுவார்கள் எனவும் தெரிகிறது. படத்தை தான் பார்த்துவிட்டதாகவும் அருமையாக இருக்கிறது என்று சாயும் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

அடுத்த படங்கள்: கருப்பு படத்தை முடித்துவிட்டு வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46ஆவது படத்திலும், ஜித்து மாதவன் இயக்கத்தில் 47ஆவது படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். லக்கி பாஸ்கர் படத்தை இயக்கி வெங்கி அட்லூரியும், ஆவேஷம் படத்தை இயக்கி ஜித்து மாதவனும் பெரிய பெயரை பெற்றிருக்கிறார்கள். எனவே அவர்கள் சூர்யாவை வைத்து இயக்கும் படங்களும் அவர்களது முந்தைய படங்கள் போன்று இருக்கும் என்ற ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
வணிக ரீதியான வெற்றி அவசியம்: சூர்யாவுக்கு இப்போது ஒரு கமர்ஷியல் வெற்றி கட்டாயம் தேவைப்படுகிறது. அதனை கருப்பு, சூர்யா 46, சூர்யா 47 ஆகிய மூன்று படங்களுமே நிச்சயம் நிறைவேற்றும் எனவும் அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நேருக்கு நேர் படத்தில் சூர்யாவின் நடனத்தை பார்த்துவிட்டு ஒரு பத்திரிகை மோசமாக விமர்சனம் செய்துவிட்டது.
அவர் அப்படி இல்லை: ஆனால் அதே பத்திரிகை பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவின் நடனத்தை பார்த்து தன்னுடைய விமர்சனத்தை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தது. சூர்யா பார்க்கத்தான் சாதுவாக இருப்பார். ஆனால் நினைத்ததை நடத்தாமல் விடமாட்டார். வெறிப்பிடித்தவர் அவர். நான் பல ஹீரோயின்களுடன் உருண்டிருக்கிறேன். ஆனால் சூர்யா அப்படி இல்லை. எந்த ஹீரோயினையும் தொடாமல்தான் காதல் காட்சிகளில் நடிப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











